/tamil-ie/media/media_files/uploads/2018/04/arun-jaitley-1.jpg)
அருண் ஜெட்லி அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். 2014ம் ஆண்டு பாஜக தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அருண் ஜெட்லி
சிறுநீரக பிரச்சனையால் தொடர்ந்து அவதிக்கு ஆளாகி வந்த அருண் ஜெட்லிக்கு கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் மூன்று மாத காலம் ஓய்வில் இருந்தார். அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாதாலும், நோய் தொற்றுக் காலம் முடிவுற்ற நிலையிலும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்கு மேல் பதவி ஏற்கலாம் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் வருகையைத் தொடர்ந்து அவருடைய அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு, நோய் தொற்று வராமல் இருப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்துள்ளது அமைச்சகம்.
இவரின் மூன்று மாத விடுப்பில் நிதித் துறை அமைச்சராக மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. To read this article in English
அருண் ஜெட்லி கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் இயங்கி வருவதோடு, எதிர்கட்சித் தலைவர்களின் ஜிஎஸ்டி குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.