2018-19 பட்ஜெட் குறித்த சந்தேகளுக்கு ட்விட்டரில் பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி!

பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு பதில் அளிக்கவுள்ளார்.

பாரளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கிறார்.

2018- 19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், டெல்லியில் உள்ள பாரளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில், தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு பதில் அளிக்கவுள்ளார்.

பட்ஜெட்டில், விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வும் போன்ற சாமானிய குடும்பங்கள் எதிர்பார்க்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த எதிர்பார்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு பட்ஜெட் குறித்து பொதுவாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் ஜெட்லி பதில் அளிக்கிறார். பட்ஜெட் குறித்த கேள்விகள் கேட்பவர்கள் #AskYourFM என்ற ஹேஷ்டாக்கில் ட்விட்டரில் பதிவிட வேண்டும்.

×Close
×Close