By: WebDesk
February 1, 2018, 11:15:46 AM
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனால் சபையில் கூச்சல் ஏற்பட்டது. இந்தி தெரியாத பிற மாநில எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 2018 – 19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை முதன் முறையாக இந்தியில் தாக்கல் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அருண் ஜெட்லி இந்தியில் பட்ஜெட் உரையாற்றியுள்ளார்.
மரபை மீறி, அருண் ஜெட்லி இந்தியில் உரையாற்றியது பெரும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர், 2018 – 19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமனியர்களுக்கு அடிப்படையாக பட்ஜெட் குறித்த அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்பதற்காக அருண் ஜெட்லி இந்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், பாரளுமன்றத்திலும் இந்தி திணிப்பா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்தி மட்டுமில்லாமல், குஜராத்தி, மராத்தி என அனைத்து மொழிகளிலும் அருண் ஜெட்லி மொழிப்பெயர்ப்பு செய்து பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என்றும் அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Arun jaitley will present budget 2018 hindi