பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்: அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்!

இந்தியாவில், ஜி.எஸ்.டி., சுங்க வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய்க்கென தனிக்கணக்கும் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, 2018 – 19 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.

இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  பின்பு அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இது என்பதால், ஜி.எஸ்.டி. அமலுக்கு பின்பு இந்தியாவில், ஜி.எஸ்.டி., சுங்க வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய்க்கென தனிக்கணக்கும் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இவை எல்லாவற்றையும் மையமாகக் கொண்டு பட்ஜெட் உருவாகப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

நூறு நாள் வேலை திட்டம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்தல் போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மீது எழுந்துள்ளக்து.

×Close
×Close