Advertisment

பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் தனி உதவியாளர் கைது

பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

author-image
WebDesk
New Update
Arvind Kejriwal aide arrested in Swati Maliwal assault case

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு உள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Delhi | Arvind Kejriwal: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13 ஆம் தேதி காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Delhi News Live Updates: Arvind Kejriwal’s aide arrested in Swati Maliwal assault case

சுவாதி மாலிவால் புகார் 

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், 'உன்னை கொன்று புதைத்துவிடுவேன்' என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிபவ் குமார் புகார் 

இதற்கிடையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், சுவாதி மாலிவாலுக்கு எதிராக சிவில் லைன் பகுதிக்கு உட்பட்ட போலீசாரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் முன்அனுமதி பெறாமல், அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடும் வகையில் மாலிவால் பேசினார் 

முதல்வரிடம் சந்திப்பதற்கான முன்அனுமதியை பெற்று வரும்படி மாலிவாலிடம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டார். முதல்வரின் பாதுகாப்பு பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார். ஒழுங்குமுறைகளை மீறி நடந்து கொண்டார். 

அவருடைய நோக்கங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளன. மதிப்பு வாய்ந்த முதல்வருக்கு எதிராக, தீங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது செயல் உள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவுக்கு எதிராக மாலிவால் மிரட்டல் விடுத்ததுடன், நிச்சயம் விளைவுகளை நீ சந்திக்கும் வகையில் செய்து விடுவேன். ஆயுசுக்கும் சிறையில் கிடந்து துன்பப்படும்படி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இது தேர்தல் நேரம். அதனால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு இருக்க கூடும். பா.ஜ.க.வினருடனான அவருடைய தொலைபேசி பதிவுகள், உரையாடல்கள் மற்றும் சாட்டிங்குகளை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.  இதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கும் சாத்தியம் உள்ளது என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

கைது 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு உள்ளார். மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதில், கெஜ்ரிவாலின் வீட்டில் பிபவ் குமார் இருக்கிறார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரின் வழக்கறிஞர்கள் திஸ் ஹசாரி நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுஷில் அனுஜ் தியாகி முன் இன்று சனிக்கிழமை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு இன்றே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சிசிடிவி காட்சி வெளியீடு 

இதற்கிடையில், சம்பவத்தன்று மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாவது சிசிடிவி காட்சியை ஆம் ஆத்மி கட்சி இன்று சனிக்கிழமை வெளியிட்டது. இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி, சுவாதி மாலிவால் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த வீடியோவில், அவரது உடைகள் கிழிந்திருக்கவில்லை, அவரால் நன்றாக நடக்க முடிகிறது. அவரது தலையில் காயம் இல்லை. இதிலிருந்தே அவர் எவ்வளவு தெளிவாக பொய் சொல்கிறார் என்று தெரிகிறது ." என்று அவர் கூறினார். 

முன்னதாக, மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால் பா.ஜ.க தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக அதிஷி கூறினார். இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “தேர்தலின் போது பா.ஜ.க அவரைக் கைக்கூலியாகப் பயன்படுத்துகிறது. அவர் பா.ஜ.க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த வழக்கில் டெல்லி போலீசார் பாரபட்சமற்ற விசாரணை நடத்தினால் எல்லாம் தெளிவாகும்” என்றார். தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நாளில் முதல்வர் இல்லத்தில் இருந்து மாலிவால் வெளியே வருவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil


                                    
                                
                            
Arvind Kejriwal Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment