Advertisment

சுவாதி மாலிவால் புகார்- அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மீது வழக்குப் பதிவு

எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என் வாக்குமூலத்தை போலீசில் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

author-image
WebDesk
New Update
Swati Maliwal

Swati Maliwal

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, டெல்லி போலீஸார் வியாழக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 354, 506, 509 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் குமாருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழன் இரவு, மலிவால் மருத்துவப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஒரு சமூக ஊடக பதிவில், மலிவால், “எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என் வாக்குமூலத்தை போலீசில் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

வேறு தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் நான் செய்கிறேன் என்று கூறியவர்கள், என்னை நடத்தை படுகொலை செய்ய முயன்றவர்கள், அவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.

நாட்டில் முக்கியமான தேர்தல் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஸ்வாதி மாலிவால் முக்கியமல்ல, நாட்டின் பிரச்னைகள் முக்கியம். இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜகவில் உள்ளவர்களை நான் குறிப்பாக கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் எழுதினார்.

முந்தைய நாள், கூடுதல் போலீஸ் கமிஷனர் (சிறப்புப் பிரிவு) பிரமோத் குஷ்வாஹா மற்றும் கூடுதல் டிசிபி 2 (வடக்கு) அஞ்சிதா செப்யாலா ஆகியோர் மலிவாலின் மின்டோ ரோடு வீட்டிற்கு வந்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

அவரது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பிறகு குழு, டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவைச் சந்தித்து, எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பு இந்த விஷயத்தை நீண்ட நேரம் விவாதித்ததாக, விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெஜ்ரிவாலை சந்திக்க காத்திருந்தபோது குமார் அறைக்குள் வந்து மாலிவாலை திட்டி பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கினார், மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்ததாக, ஒரு அதிகாரி கூறினார்.

டெல்லி காவல்துறையின் டைரி பதிவின்படி, முதல்வரின் உத்தரவின் பேரில் குமார் தன்னைத் தாக்கியதாக மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். அவர் திங்களன்று சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார், ஆனால் அந்த நேரத்தில் புகார் பதிவு செய்யவில்லை.

குமாரும் ஆம் ஆத்மியும் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியில் இருக்கும் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மாலிவால், கெஜ்ரிவால் மற்றும் குமார் ஆகியோர் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள். கெஜ்ரிவால் இணைந்து நிறுவிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றும் போது அவர்கள் முதலில் சந்தித்தனர்.

செவ்வாயன்று, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார், குமார் மாலிவாலிடம் "தவறாக நடந்து கொண்டார், என்று ஒப்புக்கொண்டார், மேலும் கெஜ்ரிவால், அவரது நீண்டகால உதவியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தில்லி காவல் ஆணையருக்கு திங்கள்கிழமை மாலை கடிதம் எழுதியுள்ளார். குமாருக்கும் ஆணையம் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், வியாழன் அன்று லக்னோ விமான நிலையத்துக்கு, வந்திருந்த கெஜ்ரிவாலுடன் குமார் காணப்பட்டார்.

அங்கு சமாஜ்வாடி கட்சித் தலைவரும், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவுடன் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய போது மாலிவாலின் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ​​​​கெஜ்ரிவால் பதிலளிக்கவில்லை, மேலும் இது குறித்த கேள்விகளுக்கு சஞ்சய் சிங் பதிலளிப்பார் என்று கூறினார்.

அகிலேஷ் யாதவ், இதை விட முக்கியமான விஷயங்கள் உள்ளன, என்றார்.

சஞ்சய் சிங் கூறுகையில், “நாடு முழுவதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளது. கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவி நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்டார், நூற்றுக்கணக்கான பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர், ஆனால் இந்தியப் பிரதமர் அமைதியாக இருக்கிறார்.

பிரஜ்வல் ரேவண்ணா (ஜேடிஎஸ் எம்பி மற்றும் லோக்சபா வேட்பாளர்) ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்தார், ஆனால் அவர் இந்தியாவை பலப்படுத்துவார் என்று அவருக்கு வாக்களிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொள்கிறார். உத்தர பிரதேசத்தில், குல்தீப் செங்கார் விவகாரத்தில், ஹத்ராஸ் வழக்கில், பிரதமர் மவுனம் காக்கிறார்.

நீதி கேட்டு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தியபோது நடத்தியபோது, ​​ஸ்வாதி மாலிவால் ஆதரவு தெரிவிக்க மாலையில் DCW தலைவராக அங்கு சென்றார், ஆனால் போலீசார் அவரை இழுத்துச் சென்று அடித்தனர்.

ஆம் ஆத்மி கட்சி எங்கள் குடும்பம்; கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது... இந்த விவகாரத்தில் அரசியல் விளையாட வேண்டாம், என்றார்.

இதற்கிடையில், டில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ள அனுமதித்தார் என்று நான் கேட்க விரும்புகிறேன்... முழு நாடும், சமுதாயமும் ஸ்வாதி மாலிவால் மற்றும் பெண்களுன் நிற்கிறது’, என்றார்.

Read in English: Kejriwal aide booked for assault after Maliwal files police complaint

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment