Advertisment

'இன்னும் 2 நாளில் முதல்வர் பதவியில் இருந்து விலகல்': கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arvind Kejriwal Announces Resignation As Chief Minister Delhi  Tamil News

6 மாத சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்பே ஜூன் 26 ஆம் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அவரை மீண்டும் கைது செய்தது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Arvind Kejriwal Speech Live Updates: ‘Will resign from CM’s post in two days’, says Delhi CM in address to party workers

நிபந்தனை 

இந்த கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 

மேலும், வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும், ஒவ்வொரு வாய்தாவின்போதும் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும் என்றும் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் அளித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாத பட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறி இருந்தது.

விலகல் 

இந்நிலையில், 6 மாத சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதிய கட்சி தலைமையகத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். இதன்பிறகு அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “நீதிமன்றம் எனக்கு  ஜாமீன் வழங்கிய போதிலும், வழக்கு தொடரும். என் வழக்கறிஞர்களிடம் பேசினேன். வழக்கு முடியும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். இரண்டு நாட்களுக்கு பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்து மீண்டும் நாற்காலியில் அமரவைக்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன்." என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Delhi Arvind Kejriwal Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment