டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வெளியான செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இது "நியாயமான" மற்றும் "வெளிப்படையான" சட்ட செயல்முறையை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
முன்னதாக, டெல்லி முதலமைச்சருக்கு ஒரு "பாரபட்சமற்ற" விசாரணைக்கு ஜெர்மனியும் வலியுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, நாட்டின் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சலில், “முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கான நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலால் கொள்கையில் முறைகேடு செய்ததாகக் கூறி கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) கடந்த வாரம் கைது செய்தது.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மனி கவலை தெரிவித்தது. அப்போது, "நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இந்தக் கருத்துக்களுக்கு இந்தியாவின் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கள் இந்தியாவின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாக கூறியது.
ஜெர்மனிக்கு இந்தியாவின் எதிர்ப்பைப் பற்றி கேட்டதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “இந்திய அரசாங்கத்துடனான அவர்களின் விவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் உங்களை ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்புவோம்” என்றார்.
இதற்கு, வெளியுறவுத்துறையின் எதிர்வினை குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு இந்திய வாஷிங்டன் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஆங்கிலத்தில் வாசிக்க : Arvind Kejriwal arrest: After Germany, US encourages ‘fair, transparent’ legal process
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“