Arvind Kejriwal | Punjab | Aam Aadmi Party: டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் (ஏ.ஏ.பி) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இது ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறை கட்சியில் அடுத்த யாரை கைது செய்யப்போகிறது என்கிற பீதியில் பலரும் உள்ளனர்.
இந்த பயம் பஞ்சாப் மாநிலத்திலும் பரவியுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான பகவந்த் மான் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு, அமலாக்கத்துறையினர் மொஹாலியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-வும், ரியல் எஸ்டேட் அதிபருமான குல்வந்த் சிங்கின் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு செய்தது. அத்துடன், இது தொடர்பாக 3 பஞ்சாப் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. இதனால், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியினரிடையே கலக்கம் அதிகரித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: After Kejriwal, could Punjab govt be next? ED watch on its MLA, excise officials, AAP fears worst
நேற்று வெள்ளிக்கிழமை, பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர், ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசின் மதுபானக் கொள்கையை தேர்தல் ஆணையத்துடன் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிகை விடுத்துள்ளார்.
பஞ்சாப் மதுபானக் கொள்கை தொடர்பாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட மூன்று பஞ்சாப் அதிகாரிகள், அப்போதைய நிதி ஆணையர் (கலால்) கே.ஏ.பி சின்ஹா மற்றும் கலால் மற்றும் வரித்துறையின் ஆணையர் மற்றும் இணை ஆணையர்களான வருண் ரூஜம் மற்றும் நரேஷ் துபே ஆகியோர் ஆவர். இந்த மூன்று அதிகாரிகளும் 2022 இல் மாநிலத்தின் மதுபானக் கொள்கையை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.
தற்செயலாக, மதுபானக் கொள்கையின் கீழ் பஞ்சாப் மாநிலத்தில் மதுபானங்களை விற்க மொத்த விற்பனை உரிமம் (எல்.1) பெற்ற இரண்டு நிறுவனங்களின் விளம்பரதாரர்கள் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில், பஞ்சாப் மதுபானக் கொள்கை வகுக்கும் போது, ரூஜாமும் துபேயும் இருந்ததாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை ரூஜாம் மற்றும் துபேயின் வீடுகளில் ரெய்டு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
கடந்த ஆண்டு, ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன் பிரிவு 17ஏ-ன் கீழ், இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மாநில அரசிடம் சி.பி.ஐ அனுமதி கோரியிருந்தது. இருப்பினும், அதற்கு அரசு பதிலளிக்கவில்லை.
இப்போது நிதி ஆணையராக சின்ஹா
இதுகுறித்து பஞ்சாப் அரசு வட்டாரங்கள் கூறுகையில், அதிகாரிகள் கொடுக்கும் ஒப்புதல் அரசியல்வாதிகளுக்கு எதிராக மாறக் கூடும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுவதாக தெரிவித்தனர்.
அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், “எங்களது மதுபானக் கொள்கை வெற்றியடைந்தது, நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளோம். ஆனால், மத்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று தெரியவில்லை. அமலாக்கத்துறையும் எங்களைப் பின்தொடர்ந்து நெருங்கி விட்டது. ஏற்கனவே பஞ்சாபில் மதுக்கடைகளுடன் தொடர்புடைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது ரெய்டு நடந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது என்றுதான் தலைமைச் செயலகத்தில் பேசப்படுகிறது." என்று அவர் கூறினார்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து பஞ்சாப் அதிகாரிகள் பாடம் புகட்ட முடியும் என்றும், குறைபாடுள்ள மதுபானக் கொள்கை ஆவணத்தில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்ட நேர்மையான அதிகாரிகளை பாதுகாக்க அமலாக்கத்துறையை வலியுறுத்துவேன் என்றும் பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் கூறினார்.
பஞ்சாப் மதுபானக் கொள்கை என்ற சதி மூலம் பஞ்சாப் மக்களை ஆம் ஆத்மி ஆயிரக்கணக்கான கோடிகளை ஏமாற்றியுள்ளது என்றும், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளரும், முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதாவை குறிவைத்து, 'வெளிப்படையான கொள்ளை மற்றும் மாநில கொள்ளையை அனுமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அகாலிதளம் எம்.பி ஹர்சிம்ரத் கவுர் பாதலும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக தாக்கி பேசுகையில், “டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் தன்னை பிரகடனப்படுத்திய கட்டார் இமாந்தர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, அதே ஊழலை செய்து பஞ்சாப் கஜானாவை கொள்ளையடித்த அனைவரையும் கைது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பஞ்சாபின் மதுபானக் கொள்கை டெல்லி கொள்கையில் அதே நபர்களால் அதே பயனாளிகளால் வடிவமைக்கப்பட்டது." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.