Advertisment

கெஜ்ரிவால் இன்று கைது? ஆம் ஆத்மி தலைவர்கள் அச்சம்- கட்சியில் சலசலப்பு

அவரது கட்சி சகாக்களான துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Delhi Chief Minister Arvind Kejriwal

Delhi Chief Minister Arvind Kejriwal

புதன்கிழமை இரவு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலர், கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் மறுநாள் காலை சோதனை நடத்தப்படலாம் என்றும், அவர் கைது செய்யப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

Advertisment

புதன்கிழமை காலை அமலாக்கத் துறையின் (ED) தலைமையகத்திற்கு வெளியே ஏற்பாடுகளை செய்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் சமூக ஊடகப் பதிவுகளால், வடக்கு மாவட்ட காவல்துறை முதல்வர் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்தது.

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பி உள்ளதுமேலும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அவரது கட்சி சகாக்களான துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திய பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

சஞ்சய் சிங்கை அவரது வீட்டில் விசாரணை செய்த பின்னர் அக்டோபர் 4 ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கிடையில், நாயர் நவம்பர் 2022 இல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை கைது செய்தது.

அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால், தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது, ஜனவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

அமலாக்கத்துறை தன்னிடம் உள்ள ஏதேனும் தகவல் அல்லது ஆவணங்களைத் தேடினால், "எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பேன், என்று எழுதினார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு நவ.2 மற்றும் டிச.21 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த இரண்டு விசாரணைகளுக்கும் ஆஜராகாமல் கேஜ்ரிவால் தவிர்த்திருந்தார். மூன்றாவது சம்மன் அவரை புதன்கிழமை ஆஜராகுமாறு கூறியது.

ஆம் ஆத்மி, பாஜக குற்றச்சாட்டு

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலையில், கெஜ்ரிவாலை கைது செய்ய பாஜக சதி செய்வதாக டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேர்தலுக்கு முன்பு ஏன் அவருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது? தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்ய மத்திய அரசு சதி செய்து வருகிறது, என்றார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாறி, எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவும் அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மை- எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்தவுடன் அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சம்மன்களும் அழிக்கப்படும், என்று அமைச்சர் அதிஷி கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, யாராவது குற்றம் சாட்டப்பட்டால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலில் நுழைந்த அதே கெஜ்ரிவால், இன்று என்ன சொன்னாலும் சரி என்று நினைக்கிறார்.

அமலாக்கத்துறை அவருக்கு மூன்று சம்மன்களை அனுப்பியுள்ளது, ஆனால் அவர் இன்னும் ஏஜென்சியின் முன் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆஜராகவில்லை. கெஜ்ரிவால் மிகவும் நேர்மையற்றவர் மற்றும் ஊழல்வாதி என்பதை இது நிரூபிக்கிறது, என்றார்.

Read in English: AAP goes into a huddle as leaders air fears Kejriwal could be arrested today

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment