வியாழக்கிழமை மாலை 7 மணிக்குள் “சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கைகள் / குற்றச்சாட்டுகள் / மறுப்புக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு” ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Arvind Kejriwal gets EC notice over AAP’s ‘disparaging’ social media posts on PM Modi
தொழிலதிபர் கௌதம் அதானிக்காக பிரதமர் நரேந்திர மோடி வேலை செய்வதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அக்கட்சியின் இரண்டு எக்ஸ் பதிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பா.ஜ.க நவம்பர் 10-ம் தேதி அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம், “மேற்கூறிய புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆம் ஆத்மி கட்சியின் பக்கத்தில் இருந்து பதிவிடப்படும் ட்வீட்கள், தேர்தல் மற்றும் தண்டனை சட்டங்களின்படி தேர்தல் நடத்தை விதிககளை மீறுவதாக உள்ளது என்ற் பார்வை உள்ளது.” என்று கூறியுள்ளது.
வியாழக்கிழமை மாலை 7 மணிக்குள் “சமூக வலைதளங்களில் கூறப்படும் அறிக்கைகள் / குற்றச்சாட்டுகள் / மறுப்புக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு” ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
Election Commission issues notice to Aam Aadmi Party national convenor, Arvind Kejriwal, over social media posts by the party that targeted Prime Minister Narendra Modi. EC notice says the AAP violated Model Code of Conduct. @IndianExpress pic.twitter.com/Skd5SYUXf8
— Damini Nath (@DaminiNath) November 14, 2023
கடந்த வாரம் இரண்டு பதிவுகளில், பிரதமரும் அவரது அரசாங்கமும் பொதுமக்களுக்காக வேலை செய்யவில்லை, ஆனால் அதானிக்காக செயல்படுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
“முதல் பதிவேற்றம் மற்றும் ட்வீட்டில் அனிமேஷன், கேலிச்சித்திரம் மற்றும் வரைபடங்கள் மற்றும் தொழிலதிபர் அதானியுடன் பிரதமரை தொடர்புபடுத்தி மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கம் உள்ளிட்ட படங்கள் உள்ளன. பிரதமர் மோடி, அதானியிடம் கெஞ்சுகிறார் அல்லது அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் அல்லது அவரிடம் தெரிவிக்கிறார் என்று ஒரு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது” என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
தேசியக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடந்து வரும் மாநிலத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், “மற்றொரு தேசியக் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகருக்கு எதிராக அவதூறான செய்தியை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசத்தின் பிரதமரை ஒரு தொழிலதிபருடன் தொடர்புபடுத்தி அவரை இழிவுபடுத்தும், அவமதிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் அனிமேஷன், கேலிச்சித்திரம், மோசடி, தொடர்பு ஆகியவற்றை நியாயப்படுத்த உண்மைகளை சரிபார்த்து ஆதாரம் வைத்திருக்க வேண்டும்.” என்று தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளது.
"தலைவர்களின் பொது நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத, தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் விமர்சிப்பது... சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள் அல்லது திரிபுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகள் அல்லது அவர்களது தொண்டர்களை விமர்சிப்பது... ஆகிய இரண்டு பதிவுகளும் முதன்மையாக தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தேர்த்ல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில் கூறியுள்ளது.
1969-ம் ஆண்டு, குருஜி ஸ்ரீஹரி பலிராம் ஜிவடோட் வெர்சஸ் விதல்ராவ் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது. அதில் “அவதூறு பிரச்சாரம் ஒரு தனிநபருக்கு எதிராக மக்கள் மனதில் தப்பெண்ணத்தை உருவாக்கும்” என்று கூறியது. டி.டி.வி தினகரன் vs சிட்டி பப்ளிக் பிராசிகியூட்டர் உயர் நீதிமன்ற வளாகம் விவகாரத்தில் 2021 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டியுள்ளது. உயர் நீதிமன்றம் “அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், ஒரு நபர் தலைவர் நிலைக்கு உயர்த்தப்பட்டால் இந்த நீதிமன்றத்தின் கருத்து இதுதான். ஒரு அரசியல் கட்சி பொது வாழ்வில் மற்றவர்களுக்கு மிகுந்த மரியாதை காட்ட வேண்டும்.” என்று தீர்ப்பளித்தது.
தேர்தல் பிரசாரத்தில் கண்ணியத்தைக் காக்கவும், கண்ணியத்தின் வரம்புகளை மீறுவதைத் தவிர்க்கவும், அரசியல் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணம் மற்றும் நடத்தை மீதான தாக்குதல்களைத் தவிர்க்கவும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறையில் நெறிமுறை உணர்வு என்பது நேரடி மீறலைத் தவிர்ப்பது மட்டுமல்ல, தேர்தல் களத்தை அறிவுறுத்தும் அல்லது மறைமுகமான அறிக்கைகள் அல்லது சூழ்ச்சிகள் மற்றும் அதன் விளைவாக ஜனநாயக செயல்முறைகள் அல்லது பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் தேர்தல் இடத்தைக் கெடுக்கும் முயற்சிகளைத் தடை செய்வதாகும்” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது, மோடியிடம் தனது பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு ஏன் பெல் நிறுவனத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி, வியாழக்கிழமை இரவு 8 மணிக்குள் அவரது அறிக்கையை விளக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலில் பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பும் இரண்டாவது நோட்டீஸ் இது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.