டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் இன்றுடன் (ஜுன் 1) முடிவடைகிறது. ஜுன் 2-ம் தேதி கெஜ்ரிவால் திகார் சிறையில் மீண்டும் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) வீடியோ பதிவில் பேசிய அவர், “சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற” சிறைக்குச் செல்வதில் பெருமைப்படுவதாக கூறினார். மேலும் இந்த நாட்டு எனது பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும். டெல்லி நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தான் "மகன்" என்ற முறையில், இதைக் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் சரணடையவிருக்கும் கெஜ்ரிவால் தனது வீடியோ உரையில், டெல்லியில் தனது அரசாங்கம் செய்து வரும் பணிகள் நிறுத்தப்படாது என்றார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து சிறைக்கு செல்வதாக அவர் கூறினார். அவர் சிறையில் "சித்திரவதை" செய்யப்படலாம் என்றும் கூறினார்.
“நாம் அனைவரும் சேர்ந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறோம். நாட்டைக் காப்பாற்ற எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் உயிரைக் கூட இழந்தால், வருத்தப்பட வேண்டாம், ”என்று முதல்வர் கூறினார்.
“உங்கள் குடும்பத்தின் மகனாக எனது கடமையை நான் எப்போதும் நிறைவேற்றி வருகிறேன். இன்று நான் உங்களிடம் என் குடும்பத்திற்காக ஒன்று கேட்க விரும்புகிறேன். என் பெற்றோர் மிகவும் வயதானவர்கள், என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, சிறையில் இருக்கும் நான் அவரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். நான் போன பிறகு என் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்... என் அம்மாவுக்காக தினமும் பிரார்த்தனை செய்தால், அவர் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பார்,” என்றார்.
தொடாந்து, லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.
மேலும், நாளை உடன் 21 நாட்கள் முடிவடைகின்றன, நாளை மறுநாள் நான் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். இந்த நேரத்தில் இவர்கள் என்னை எத்தனை நாட்கள் சிறையில் அடைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனது நம்பிக்கை அதிகமாக உள்ளது.
சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் பெருமை கொள்கிறேன். அவர்கள் என்னை பல வழிகளில் உடைக்க முயன்றனர்... என்னை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை," என்று வீடியோ செய்தியில் கெஜ்ரிவால் கூறினார், சிறையில் "சித்திரவதை" செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/delhi/cm-kejriwal-interim-bail-ends-on-june-2-9363830/
என்னைப் பல வழிகளில் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் என் மருந்துகளை நிறுத்தினர்; நான் 20 வருடங்களாக தீவிர சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன்... சிறையில், பல நாட்கள் இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டார்கள், என் சர்க்கரை 300, 325 (mg/dL) ஐ எட்டியது.
சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், ஏன் இதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் கூறினார்.
மீண்டும் சிறைக்குச் செல்வதற்கு முன் நோயறிதல் சோதனைகள் தேவை என்று பேசிய ஆம் ஆத்மி தலைவர், “நான் கைது செய்யப்பட்டபோது எனது எடை 70 கிலோவாக இருந்தது. இன்று 64 கிலோவாக உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் என் உடல் எடை கூடவில்லை. இது உடலில் ஏதேனும் பெரிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பல சோதனைகள் செய்யப்பட வேண்டும், என் சிறுநீரில் கீட்டோன் அளவும் நிறைய அதிகரித்துள்ளது.
அவர் இல்லாத நேரத்திலும் டெல்லி அரசு தொடர்ந்து செயல்படும் என்று கூறிய முதல்வர், “உங்கள் இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள், மருத்துவமனைகள், இலவச மருந்துகள், சிகிச்சை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 24 மணி நேர மின்சாரம் மற்றும் இதர பணிகள் தொடரும். திரும்பி வந்த பிறகு, ஒவ்வொரு தாய் மற்றும் சகோதரிக்கும் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது. ஜாமின் கோரி தொடர்ந்த விசாரணை நீதிமன்றம் மனுவை விசாரிக்கும் என்று கூறியது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.