அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியின் முதல்வராக மூன்றாவது முறை பதவியேற்றார். இருப்பினும், இந்த பதவியேற்பு விழாவில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது 'பேபி மஃப்ளர்மேன்'தான்.
குளிர்காலத்தில் கெஜ்ரிவால் மஃப்ளரை பயன்படுத்தும் காட்சியை பிரதிபலிக்கும் வகையிலான அந்த குட்டி சிறுவனின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
டெல்லி தேர்தல் முடிவின் போது, ஒரு குட்டி சிறுவன் மீசை, கண்ணாடி,மஃப்ளரோடு ( குட்டி அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதிபலிக்கும் விதமாக )ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தின் முன்பாக காணப்பட்டான்.
தேர்தல் முடிவு அன்று கெஜ்ரிவாலை பார்க்க முடியாமல் வீடு திரும்பிய அந்த சிறுவனுக்கு, இன்று நடக்கும் பதிவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
டெல்லி சட்டமன்றத் தேர்தளின் போது இந்த குட்டி கெஜ்ரிவால் புகைப்படம் நாடு முழுதும் பேசப்பட்டது. கெஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரங்கள் கல்வி, சுகாதாரம், தண்ணீர் போன்றைவைகளை முன்னிலை படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் - ராகவ் சதா
லயன் கிங் படத்தில் வருவதை போன்று இந்த பேபி மஃப்ளர்மேனை கெஜ்ரிவால் தூக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் - சந்திரேஷ்
#Littlemufflerman #MufflermanReturns #Mufflerman என்ற ஹஷ்டேக் இன்று ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருந்தது.