அதிகாரிகள் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கான பேனர் மற்றும் போஸ்டர்களில் டெல்லி துணைநிலை ஆளுநர், மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறும் வகையில் மேடையில் பேனர் மாற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சி போஸ்டர் போரராக வெடித்து அரசியலாக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி அமைச்சர் கூறினார்.
அதிகாரிகளின் கருத்துப்படி, இந்த நிகழ்ச்சிக்கான பேனர் மற்றும் போஸ்டர்களில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் புகைப்படம் இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறும் வகையில் மேடையில் இருந்த பேனர் மாற்றப்பட்டது.
டெல்லி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் வான்மஹோத்சவ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி திட்டப்படி, துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர் கோபால் ராய் கலந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் கோபால் ராய், செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் அலுவலகம் டெல்லி காவல்துறை அதிகாரிகளை மேடையை கைப்பற்ற அனுப்பியதாகவும், எல்.இ.டி திரையை அசல் பேனரால் மூடி மறைக்கவும், எல்.இ.டி திரையை மறைப்பதற்கு பிரதமரின் புகைப்படம் கொண்ட பேனரை வைக்கவும் அனுப்பியதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: “முதலமைச்சரும் துணைநிலை ஆளுநரும் இந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த அரசாங்க திட்டத்தில், பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை அனுப்பப்பட்டு, பந்தல் மற்றும் மேடையை அபகரிக்கச் செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மேடையில், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டது. அதை அகற்றினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்படி, எல்.இ.டி திரையில் பேனர் ஒளிரும், அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இசைக்கப்படும். ஆனால், எல்.இ.டி.யில் ஒரு பேனர் வைக்கப்பட்டது. இது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது” என்று கூறினார்.
இந்த பேனர்களுக்கான இறுதி வடிவமைப்பு வியாழக்கிழமை அரசுக்கு அனுப்பப்பட்டதாக துணைநிலை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி அரசாங்க அதிகாரி ஒருவரும் இந்த உண்மையை உறுதிப்படுத்தினார். ஆனால், இறுதி வடிவமைப்பில் பிரதமரின் புகைப்படம் இல்லை என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சி அரசியலாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து, டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் இந்த திட்டம் தொடர்பான அனைத்தையும் பரஸ்பரம் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது. “துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் பாட்டி சுரங்கத்திற்கு கடைசியாக கூட்டாகச் சென்றபோது, அவர்கள் தங்கள் பகுதி எம்.எல்.ஏ இருப்பதை உறுதி செய்த போதிலும், அவர்கள் (டெல்லி அரசு) அந்த பகுதி எம்.பி-யைக்கூட வேண்டுமென்றே அழைக்கவில்லை. இருப்பினும், எம்.பி அல்லது எம்.எல்.ஏ-வை அழைக்க வேண்டாம் என்றும், அவர்கள் வருகைக்கு அரசியல் சாயலைக் கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் குறிப்பிட்டு கேட்டுக்கொண்டனர்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவங்கள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் டெல்லி அரசாங்கத்திற்கும் இடையேயான தொடர் விவகாரங்களின் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியும் வந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய துணைநிலை ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை, துணைநிலை ஆளுநர், டெல்லி கலால் கொள்கை 2021-22-ஐ சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
இது டெல்லி கலால் துறையின் பொறுப்பாளராக இருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நேரடியாக தாக்கியது. வெள்ளிக்கிழமை டெல்லி துணைநிலை ஆளுநர் உடனான திட்டமிடப்பட்ட கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”