70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 62 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியோ போட்டியிட்ட 66 தொகுதிகளில் 63 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இன்று மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்றார்.
ரியாக 12:30 மணிக்கு டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். பதவி பிரமாணாம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார் டெல்லி ஆளுநர் பைஜால். டெல்லி துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் மணீஷ் சிசோடியா. கோபால் ராய், கைலாஷ் கலோட், இம்ரான் ஹூசைன் ஆகியோரும் தற்போது பதவி ஏற்றுக் கொண்டனர்.
இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள!
இன்று காலை 10 மணியில் இருந்து டெல்லியில் அமைந்திருக்கும் ராம்லீலா மைதானத்தில் இந்த முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் போக்குவரத்து காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
வியாபாரிகள், ஆசியர்கள், பேராசிரியர்கள், கூலித் தொழிலாளிகள், மாணவர்கள், டாக்டர்கள், விளையாட்டுத்துறை வீரர்கள், பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மெட்ரோ ஓட்டுநர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து 50 நபர்களை தேர்வு செய்து சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் டெல்லி எம்.பிக்கள் 7 பேரையும் அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துள்ளார். ஆனால் பிரதமர் இன்று வாரணாசி செல்ல இருப்பதால் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.
To read this article in English with latest live updates