Advertisment

‘கைது சட்டத்திற்குப் புறம்பானது என்றால் ஒரு நாளே மிக நீண்டது’: இ.டி கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வாதம்

கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத் துறை; தாமதப்படுத்தும் தந்திரம் என கெஜ்ரிவால் தரப்பு குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 15 அன்று பாவ்நகரில் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பூபேந்திர ராணா)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்கிறது என்று புதன்கிழமை வாதிட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘A day is far too long when the arrest is illegal’: Arvind Kejriwal to Delhi High Court in plea against ED arrest, remand

“தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சமச்சீரற்ற நிலையை உருவாக்க நீங்கள் ஏதாவது செய்தால், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் நீங்கள் தலையிடுகிறீர்கள். இந்த கைது நடவடிக்கை களத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி கூறினார்.

கைது செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை நீங்கள் எனக்கு விளக்கம் வேண்டும்,” என்று சிங்வி கூறினார். “இது ஜனநாயகம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், அடிப்படை கட்டமைப்பு, சம நிலை சம்பந்தப்பட்டது. கைது சட்டத்திற்கு புறம்பானது என்றால் ஒரு நாளே மிக நீண்டது. அமலாக்கத்துறை தனது மோசமான நோக்கத்தை அடைவதன் மூலம் அதிக கால அவகாசம் கோருகிறது,” என்று வழக்கறிஞர் சிங்வி வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறை மூன்று வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இடைக்கால நிவாரணத்திற்கு, பதிலளிக்கவும் உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என, அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதேநேரம், பதிலைத் தாக்கல் செய்வதற்கான கோரிக்கை "தாமத தந்திரம்" என்று சிங்வி குற்றம் சாட்டினார், மேலும் ஆம் ஆத்மி தலைவரான கெஜ்ரிவாலின் கைது தொடர்பான பல "வெளிப்படையான சிக்கல்களை" சுட்டிக்காட்டினார்.

கெஜ்ரிவாலின் கைது, அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் முடக்குவதாகும் என்றும் சிங்வி கூறினார். “நான் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். ஒத்துழையாமை என்பது அமலாக்கத்துறை தீவிரமாக செயல்படும் சமீபத்திய காலங்களில் அதிகமாக தவறாக பயன்படுத்தப்படும் சொற்றொடர்களில் ஒன்றாகும். சுய குற்றச்சாட்டிற்கு எதிராக (நீங்கள்) என் உரிமையைப் பயன்படுத்துவதால் நான் உங்களைக் கைது செய்வேன் என்று சொல்ல முடியுமா?" சிங்வி கூறினார்.

கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார், உயர் நீதிமன்றம் அவருக்கு "இந்த நிலையில்" கட்டாய நடவடிக்கையிலிருந்து இடைக்கால பாதுகாப்பை வழங்க மறுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். மார்ச் 22 அன்று, அவர் "டெல்லி கலால் ஊழலின் அரசன் மற்றும் முக்கிய சதிகாரர்" என்று டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறியதை அடுத்து, மார்ச் 28 வரை அமலாக்கத் துறையின் காவலில் வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

இதற்கிடையில், கடந்த வாரத்தில் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இரண்டு "வழிகாட்டுதல்களை" பிறப்பித்துள்ள நிலையில், அவரின் "ஆணை மற்றும் அதிகாரத்தின் அங்கீகாரமற்ற பயன்பாடு" தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுனர் வி.கே சக்சேனாவிடம் பா.ஜ.க புகார் அளித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், வெளியான "பணப் பாதையில்" இருந்து "கவனத்தை திசை திருப்ப" பா.ஜ.க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment