போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (NCB) கப்பலில் போதைப்பொருள் சோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட 22 வயதான ஆச்சித் குமாருக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், வெறும் வாட்ஸ்அப் அரட்டைகளின் அடிப்படையில் மட்டுமே, அவர் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் ஆகியோருக்கு சப்ளையர் என்று கூற முடியாது என தெரிவித்துள்ளது.
“... விண்ணப்பதாரர் (ஆச்சித் குமார்) ஒரு சப்ளையர் என்று NCB கூறினாலும், விண்ணப்பதாரர் கடத்தல் பொருட்களை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் காட்டுவதற்கு குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் கான் உடனான WhatsApp அரட்டைகளைத் தவிர, NCB குறிப்பிட்ட ஆதாரத்தை பதிவு செய்யத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆச்சித் குமார் அத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. வெறும் வாட்ஸ்அப் அரட்டைகளின் அடிப்படையில், ஆச்சித் குமார் ர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன்கான் உடனான ஆச்சித் குமாரின் வாட்ஸ்அப் அரட்டைகள். எனவே மாண்புமிகு உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்படுகிறது, ”என்று சிறப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தனது உத்தரவில் கூறியது.
ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் மாடல் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறப்பு நீதிபதி வி.வி.பாட்டீல் சனிக்கிழமையன்று குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு ஜாமீன் வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் ஐந்து பேரின் (ஆச்சித் குமார் மற்றும் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்துடன் தொடர்புடைய நால்வர்) ஜாமீன் மனுக்கள் மீதான அவரது விரிவான உத்தரவுகளில், அவர்கள் ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி கூறினார். முன்னதாக, அக்டோபர் 20 அன்று ஆர்யன்கான், அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் தமேச்சா ஆகியோருக்கு ஜாமீன்களை நிராகரித்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் “பொதுவான நூல்” மூலம் இணைக்கப்பட்டுள்ளனர் என்ற NCB வாதத்தை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஆர்யன் கானின் போனில் இருந்து வாட்ஸ்அப் அரட்டைகள் கிடைத்ததாகக் கூறி 2.6 கிராம் கஞ்சாவுடன் ஆச்சித் குமாரை NCB கைது செய்தது. அதில் ஆச்சித் குமார் ஒரு ‘கடை வியாபாரி’ என்றும், நகரின் ‘கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கின்’ ஒரு பகுதி என்றும் NCB கூறியது. இந்த குற்றச்சாட்டுகள் 22 வயது மாணவரின் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார், அத்தகைய கூற்றுகளை உறுதிப்படுத்த எதுவும் இல்லை. விசாரணையின் போது சதியின் அம்சம் பரிசீலிக்கப்படும் என்று NCB கூறியுள்ள நிலையில், சதி மற்றும் ஊக்குவிப்பு வழக்கிறான முகாந்திரம் இருந்தால், NCB விளக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் கூறியது.
“சதி குற்றச்சாட்டுகளைப் பொருத்தவரை, குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் மற்றும் அர்பாஸ் உடன் தற்போதுள்ள விண்ணப்பதாரர் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்களுக்கு மாண்புமிகு உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே பிரிவு 29 (சதி) தற்போதைய விண்ணப்பதாரருக்கு பொருந்தும் என்று கூற முடியாது, ”என்றும், மற்ற இருவருக்கும் வழங்கப்பட்ட அடிப்படையில் ஆச்சித் குமாருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கூறியது.
கோர்டேலியா கப்பலில் நேரடி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த கேன்பிளஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய நால்வருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர்கள் கப்பலில் குற்றவாளிகளுக்கு நிதியுதவி செய்ததாகவோ அல்லது அடைக்கலம் கொடுத்ததாகவோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது. கோர்டெலியா கப்பல் குழு மற்றும் ஸ்பான்சர்கள் யாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த சமீர் சேகல் மற்றும் கோபால்ஜி ஆனந்த், ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் மானவ் சிங்கால் மற்றும் பாஸ்கர் அரோரா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
“... விண்ணப்பதாரரின் (ஈவென்ட் மேனேஜ்மென்ட்) நிறுவனம் கப்பலில் நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளது மற்றும் கப்பலில் நுழைவதை ஒழுங்குபடுத்தவோ அல்லது அறைகளை ஒதுக்கவோ அதிகாரம் இல்லை. கப்பல் மற்றும் அதில் இருந்த பயணிகள் மீது அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று கூறலாம். எனவே, விண்ணப்பதாரரை இணைக் குற்றம் சாட்டப்பட்டவருடன் அல்லது இணைக் குற்றம் சாட்டப்பட்டவரின் நிகழ்வில் செய்யப்பட்ட மீட்புடன் தொடர்பு இருப்பதாக நேரடியாகக் கூற முடியாது. கோர்டேலியா கப்பல் குழு மற்றும் ஸ்பான்சர்கள் யாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று நீதிமன்றம் கூறியது.
ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய நால்வருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கும் போது, பயணிகள் மற்றும் கப்பலில் நடத்தப்படவிருந்த ‘ரேவ் பார்ட்டி’யின் தன்மை குறித்து தங்களுக்குத் தெரியும் என்று NCB கூறியது. ஆனால் நால்வர் தரப்பில் பயணச்சீட்டு அல்லது கப்பலுக்குள் நுழைவதில் தொடர்பு இல்லை என்றும், கப்பலில் ஒரு சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் மட்டுமே தங்களது வேலை என்று வாதிட்டனர். அவர்களுக்கு எதிராக NDPS சட்டத்தின் பிரிவு 29 (சதி) அல்லது 27A (சட்டவிரோத கடத்தல் மற்றும் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்தல்) ஆகியவற்றில் எந்த ஆதாரமும் இல்லை, எனவே அவை பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைத்தல் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியிருந்தாலும், அவர்கள் ஜாமீன் பெறுவதற்கும் தகுதியுடையவர்கள் என்பதால் அது அம்சத்திற்கு வரவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
உல்லாசக் கப்பலில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ரேவ் பார்ட்டி நடந்ததாகக் கூறப்படும் தொடர்பான ரகசிய தகவல் கிடைத்ததாக NCB கூறியது. அக்டோபர் 2 ஆம் தேதி உல்லாசப் பயணக் கப்பலில் ஏறுவதற்கு முன்பு ஆர்யன் கான் உட்பட சிலரை NCB தடுத்து வைத்தது. அதன் பிறகு கப்பல் இரண்டு நாள் பயணமாக அரபிக்கடலில் சென்று அக்டோபர் 4 ஆம் தேதி திரும்பியது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நான்கு பேர் மற்றும் அவின் சாஹு மற்றும் மணீஷ் ராஜ்காரியா என்ற இரு பயணிகள் கப்பல் திரும்பிய போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சாஹு மற்றும் ராஜ்காரியா ஆகியோர் கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தால் முதலில் ஜாமீன் பெற்றனர்.
கைது செய்யப்பட்ட 20 பேரில், குறிப்பிட்ட அளவு போதைப்பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் உட்பட 14 பேர் இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சித் குமார் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய நான்கு பேர் சனிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர், தமேச்சா மற்றும் அர்பாஸ் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.