Delhi talks with Taliban : இந்திய அரசு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாள் கழித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, புதன்கிழமை அன்று தாலிபான்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிப்படுத்த வேண்டும் என்றும், அரசு தாலிபானை தீவிரவாத இயக்கமாக கருதுகிறதா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஐ.நா. பாதுகாப்புக்கு தலைமை தாங்கும் இந்தியா, தாலிபான்கள் பயங்கரவாத இயக்கமா இல்லையா? இல்லையென்றால் நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சென்று, தீவிரவாத இயக்கங்கள் என்று இடப்பட்டிருக்கும் பட்டியியலில் இருந்து அதனை நீக்க முயற்சி செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார் ஒமர். காபூல் உட்பட நாட்டை மொத்தமாக கைப்பற்றிய தாலிபான்களுடன் இந்தியா நல்ல உறவை வைத்துக் கொள்ளுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஒருவேளை இந்தியா அவர்களை தீவிரவாத இயக்கமாக கருதவில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து தாலிபான்களை நீக்க இந்தியா உதவ வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகள் இயல்பாக செயல்பட வேண்டும். நாம் அவர்களை வித்தியாசமாக நடத்த வேண்டாம் என்றும் கூறினார்.
ஏற்கனவே அவர்கள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் என்று இந்தியா தாலிபான்களுடன் தோஹாவில் நடத்திய பேச்சுவார்த்தையை சுட்டிக் காட்டினார். இது ஒரு பயங்கரவாத அமைப்பாக இருந்தால், தாலிபான்கள் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையில் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்த முடியும் என்று அவர் மத்திய அரசை கேட்டார்.
தாலிபான்கள் குறித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்ட ஒமர் அப்துல்லா, உங்களால் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு வெவ்வேறு அளவுகோள்களை வைக்க முடியாது. இங்கு நான் முடிவெடுப்பவன் அல்ல. என்னுடைய கருத்துகள் உங்களுக்கு முக்கியமும் அல்ல என்றும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆப்கானிஸ்தானின் நிலைமை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு தான் கூற முடியும் என்று ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஒமருடன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் மற்றும் ஸ்ரீநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபருக் அப்துல்லாவும் இந்த சந்திப்பில் பங்கேற்றார். அதே நாளில் ஜம்முவில் ஷேர்-இ-காஷ்மீர் பவனில் கட்சித் தொண்டர்களுடன் 4 மணி நேர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்ட அவர், சட்டமன்ற தேர்தலுக்கு முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் சின்ஹா ஜம்மு காஷ்மீரில் தொகுதி பிரிக்கும் பணி நிறைவுவுற்றவுடன் தேர்தல்கள் நடைபெறும் என்றும், மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் எடுக்க வேண்டும். 2019ம் ஆண்டு அரசு கவிழ்க்கப்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்ட போது நாங்கள் தேர்தலுக்கு தயார் நிலையில் தான் இருந்தோம். ஆனால், மத்திய அரசுக்கு தேவைப்படும் போது தேர்தல்களை நடத்தட்டும். ஆனால் மாநில அந்தஸ்த்தினை உடனே வழங்க வேண்டும் என்று கூறினார் ஒமர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் நாடாளுமன்றத்தில் மாநில அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்படும் என்று கூறியதை சுட்டிக் காட்டிய அவர், சட்டப்பிரிவு 370-ல் கூறப்பட்ட இதர முக்கியமான விசயங்களை நாங்கள் நீதி போராட்டத்தின் மூலம் பெறுவோம் என்று அவர் தெரிவித்தார்.
நல்ல விசயத்தை செய்ய ஏன் காலம் கடத்த வேண்டும். மாநில அந்தஸ்த்தை முதலில் வழங்குங்கள் பிறகு தேர்தலை நடத்துங்கள். அரசியல் சாசனப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ஆகஸ்ட் 5, 209ம் ஆண்டு ரத்து செய்ததன் மூலம் பலனடைந்தவர்கள் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்முவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே ஆண்டுதோறும் தர்பார் நகர்த்தும் நடைமுறையை அகற்றுவதற்கான சமீபத்திய அரசாங்க முடிவைக் குறிப்பிட்டு, மக்களுக்கு வருவாய் ஈட்டித் தந்த வாழ்வாதாரத்தைக் கூட நீங்கள் பறித்துவிட்டீர்கள். ஜம்மு வர்த்தகர்கள் தங்கள் காஷ்மீர் சகாவை விட அதிக நன்மைகளைப் பெற்றனர் என்பதை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார். ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகும், ஊழல் கட்டுப்படுத்தப்படவில்லை. வளர்ச்சிப் பணிகளும் இல்லை என்று என்றும் மக்கள் புகார்களை முன் வைக்கின்றனர் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.