Advertisment

காங்கிரஸ் பிரதமர்களை புகழ்ந்து பேசிய கெளதம் அதானி.. கட்சியின் பதில் என்ன?

கெளதம் அதானி காங்கிரஸ் பிரதமர்களை புகழ்ந்து பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சி எந்த நிறுவனத்திற்கும் எதிரானது அல்ல, ஏகபோகத்திற்கு (monopoly) எதிரானது என நச் பதில் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் பிரதமர்களை புகழ்ந்து பேசிய கெளதம் அதானி.. கட்சியின் பதில் என்ன?

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெளதம் அதானி, தனது தொழில் வளர்ச்சிக்கு அப்போதைய
காங்கிரஸ் பிரதமர்களின் திட்டங்கள் உதவின என்று பேசினர். இதற்கு காங்கிரஸ் பதிலளித்து கூறுகையில், கட்சி எந்த நிறுவனத்திற்கும் எதிரானது அல்ல, ஏகபோகத்திற்கு (monopoly) எதிரானது என தெரிவித்துள்ளது.

Advertisment

தொழிலதிபர் கெளதம் அதானி டிசம்பர் 28-ம் தேதி இந்தியா டுடே குழுமத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, அப்போதைய காங்கிரஸ் பிரதமர்களின் திட்டங்கள், கொள்கைகள் தன்னுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன எனத் தெரிவித்தார். ராஜீவ் காந்தியின் எக்சிம் கொள்கை, நரசிம்ம ராவின் தாராளமயமாக்கல், கேசுபாய் பட்டேலின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது தொழில் முயற்சிகள் வளர உதவியாக இருந்தன என்று கூறினார்.

காங்கிரஸ் குறிப்பாக ராகுல் காந்தி மோடி மற்றம் அதானி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். “அதானி-அம்பானி சர்க்கார்” என மோடி அரசை விமர்சனம் செய்கிறார். மோடியின் அரசில் இந்த இரண்டு தொழில் நிறுவனங்கள் மட்டும் வளர்ந்து வருகின்றன என குற்றஞ்சாட்டுகிறார். இந்த பின்னணியில் கெளதம் அதானி பதிலளித்துள்ளார்.

ராகுல் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது இதுகுறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியின் போது விமர்சனம் செய்தார். அப்போது டிசம்பர் 24-ம் தேதி கூறுகையில், பிரதமர் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். "இது நரேந்திர மோடிஜியின் அரசு அல்ல, இது அம்பானி-அதானியின் அரசு " என்று கூறினார்.

இந்தியா டுடே பேட்டியில் இதுகுறித்து அதானி பேசுகையில், நானும், மோடியும் குஜராத்தை சேர்ந்தவர்கள். அதானால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எளிதாக வருகின்றன. மத்தியிலும், குஜராத்தில் கேசுபாய் படேலின் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களும் தனது தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதாக தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி எக்சிம் (ஏற்றுமதி இறக்குமதி) கொள்கையை முதன்முதலில் தளர்த்தியபோது, அது எனது பொருட்கள் ஏற்றுமதிக்கு உதவியது. ராவ் அரசாங்கத்தின் கீழ், 1991-இல் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். அது எனக்கு "இரண்டாவது பெரிய உந்துதல்" கிடைத்தது. " பல தொழில்முனைவோரைப் போலவே நானும் அந்த சீர்திருத்தங்களின் பயனாளியாக இருந்தேன்" என்று அதானி கூறினார்.

குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதானியின் கருத்து பற்றி பேசுகையில், "மோடி-அம்பானி-அதானி கூட்டணி" பற்றிய தங்கள் கருத்தை மாற்றவில்லை. அதானி ராஜஸ்தானில் பெரிய முதலீடுகளை அறிவித்ததைத் தொடர்ந்து ராகுல் அளித்த "பொருத்தமான பதிலை" அர்ஜுன் மோத்வாடியா மேற்கோள் காட்டினார். ராகுல் கூறியதாவது: அதானி ராஜஸ்தானுக்கு ரூ.60,000 கோடி முதலீடு கொடுத்துள்ளார். அத்தகைய வாய்ப்பை எந்த முதல்வரும் மறுக்க முடியாது. உண்மையில், அத்தகைய வாய்ப்பை ஒரு முதல்வர் மறுப்பது சரியாக இருக்காது என்றார். தொடர்ந்து, அவர், "தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழில் நிறுவனங்களுக்கு உதவ அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை" ராகுல் கூறினார். நாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்கு 2 அல்லது 3 அல்லது 4 பெரிய நிறுவனங்கள் மட்டும் செயல்படுவது ஏகபோக உரிமையாகும். இப்போது பா.ஜ.க நாட்டில் எல்லா துறைகளையும் 2 அல்லது 3 நிறுவனங்களுக்கு வழங்கி ஏகபோக உரிமை (monopolisation of all businesses) வழங்க பார்க்கிறது.

மோத்வாடியாயும் அதையே கூறினார். காங்கிரஸ் ஒரு சாராருக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி உதவுவதை எதிர்க்கிறது. monopoly-யை எதிர்க்கிறோம். உதாரணமாக பெரும்பாலான விமான நிலையங்கள் ஒரு நிறுவனத்திற்குச் செல்வதை எதிர்க்கிறோம். அதானி குழுமத்திற்கு பல விமான நிலையங்களை பராமரிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் தனியார் நிறுவனத்திற்குச் செல்வதை எதிர்க்கிறோம் என்று கூறினார்.

குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி, காங்கிரஸ் பிரதமர்கள் தொடர்பான அதானியின் கருத்து பற்றி கூறுகையில், "ராகுல் எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு எதிரானவர் அல்ல, ஏகபோகத்திற்கு எதிரானவர். ராஜீவ் காந்தி மற்றும் ராவ் ஆகியோரின் காங்கிரஸ் அரசாங்கங்கள் லைசென்ஸ் ராஜ்-க்கு முற்றுப்புள்ளி வைத்தது. சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஐ.டி, தொலைத்தொடர்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் இந்தியாவை 21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்து வந்தது. எங்களுடையது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாக இருந்தது, அதே சமயம் பா.ஜ.கவின் அரசாங்கம் ஒரு சாராருக்கானது" என்றார்.

கேசுபாய் படேல் தொடர்பான அதானியின் கருத்துகளும் வியக்கவைத்தது. மறைந்த முதல்வர் படேலை மோடி கடுமையான விமர்சித்தார். அவரை வீழ்த்தி மோடி 2001ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு படேல் மீண்டும் முதல்வராக வரவில்லை. படேலை தொலைக் நோக்கு பார்வையாளர் என்று அழைத்த அதானி, அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் அதானி குழுமம் தனது முதல் துறைமுகத்தை கட்ச்சில் உள்ள முந்த்ராவில் நிறுவியது என்றார்.

மேலும், அதானி மோடி காலத்தில் தனது வளர்ச்சி பற்றி கூறுகையில், இது தனது வளர்ச்சி பாதையில் நான்காவது திருப்புமுனை என்று கூறினார். குஜராத்தில் 2001க்குப் பிறகு முதல்வர் மோடி அரசின் கீழ் வளர்ச்சி துறையில் பெரிய கவனம் அளவில் செலுத்தப்பட்டது. அவரது கொள்கைகள் செயலாக்கம் மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை மட்டுமல்ல, சமூக மாற்றம் மற்றும் பல கிராம பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டு வந்தது. இது தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தியது என்றார்.

முன்னதாக, அதானி மீதான ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த ஹர்திக் படேல் விமர்சித்தார். “ஒரு தொழிலதிபர் தனது சொந்த உழைப்பால் உயர்கிறார். ஒவ்வொரு முறையும் அதானி-அம்பானியை விமர்சிக்க முடியாது" என்று படிதார் தலைவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bjp Congress Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment