இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி; நேருவின் சாதனையை நோக்கி பயணம்!

11 ஆண்டுகள் மற்றும் 60 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்து, இந்தியாவின் 2-வது மிக நீண்ட தொடர்ச்சியான பிரதமர் என்ற பெருமையைப்  நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

11 ஆண்டுகள் மற்றும் 60 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்து, இந்தியாவின் 2-வது மிக நீண்ட தொடர்ச்சியான பிரதமர் என்ற பெருமையைப்  நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Narendra Modi

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி! நேருவின் சாதனையை நோக்கி பயணம்!

11 ஆண்டுகள் மற்றும் 60 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்து, இந்தியாவின் 2-வது மிக நீண்ட தொடர்ச்சியான பிரதமர் என்ற பெருமையைப்  நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் என்ற சாதனையை மட்டுமே முறியடிக்க வேண்டியுள்ளது.

Advertisment

ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் தலா 4 முறை பிரதமராகப் பதவி வகித்தாலும், நேரு 1947 முதல் 1964-ல் இறக்கும் வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். இந்திராவின் பதவிக் காலம் எமெர்ஜென்சிக்கு பிந்தைய தேர்தல்களால் தடைபட்டது. 1966 முதல் 1977 வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984-ல் படுகொலை செய்யப்படும் வரையிலும் அவர் தொடர்ந்து பிரதமராக இருந்தார். இதன் மூலம் அவரது மொத்த பதவிக்காலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாகும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தற்போதைய நிலையில், மோடியின் மொத்த பதவிக்காலம், நேரு மற்றும் இந்திரா இருவரின் மொத்த பதவிக்காலத்தை விட முழுப் பதவிக் காலம் குறைவாகவே உள்ளது. நேருவின் சாதனையை முறியடிக்க வேண்டுமானால், தனது மூன்றாவது பதவிக்காலத்தை முடித்து 2029-ல் நான்காவது முறையாக மோடி வெற்றி பெற வேண்டும். எனினும், தொடர்ச்சியாக 3 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

மோடியின் மற்ற சாதனைகள்:

சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர்: சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமரும் மோடிதான்.

மிக நீண்ட காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர்: குஜராத் முதலமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக மோடி பதவி வகித்து வருகிறார். 2001-ல் முதல்முறையாக குஜராத் முதல்வராகப் பதவி ஏற்று, 2014-ல் பிரதமராகும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார்.

காங்கிரஸ் அல்லாத முதல் 2 முழுப் பதவிக்கால பிரதமர்: 2 முழுப் பதவிக்காலங்களை முடித்த காங்கிரஸ் அல்லாத ஒரே பிரதமர் மோடிதான். அவருக்கு முன், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஆறாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார், ஆனால் அது 3 பதவிக்காலங்களில் பரவியிருந்தது. மொரார்ஜி தேசாய், சரண் சிங், சந்திர சேகர், ஐ.கே. குஜ்ரால், மற்றும் ஹெச்.டி. தேவே கவுடா போன்றோர் குறுகிய காலப் பிரதமர்களாக இருந்தனர்.

காந்தி குடும்பம் அல்லாத 2 முழுப் பதவிக்காலம்: மோடியைத் தவிர, மன்மோகன் சிங் மட்டுமே காந்தி குடும்பத்தைச் சாராத, 2 முழுப் பதவிக் காலங்களைப் பூர்த்தி செய்த மற்றொரு தலைவர் ஆவார்.

தற்போதைய பதவிக்காலம் முடிவடையும்போது, மோடியின் வயது 79 ஆக இருக்கும். இதன் மூலம் அவர் இந்தியாவின் வயதான பிரதமர்களில் ஒருவராவார். 1979-ல் தனது பதவிக்காலம் முடிந்தபோது 82 வயதாக இருந்த மொரார்ஜி தேசாயும், 2014-ல் தனது அரசாங்கம் அதிகாரத்தை இழந்தபோது 81 வயதாக இருந்த மன்மோகன் சிங்கும் மட்டுமே இவரை விட மூத்தவர்களாக இருந்தனர்.

Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: