Advertisment

பீகாரில் இந்தியா கூட்டணிக்கு சிக்கல்; உ.பி.,யில் காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்த சமாஜ்வாதி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர உள்ளதாக ஊகங்கள் வெளியானதால், இந்தியா கூட்டணிக்கு சிக்கல்; உத்தரபிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
akhilesh yadav

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை கூறுகையில், காங்கிரஸுடனான அவரது கட்சியின் கூட்டணி, உத்தரபிரதேசத்தில் 11 "வலுவான" மக்களவைத் தொகுதிகளுடன் "ஒரு நல்ல தொடக்கத்தில்" உள்ளது என்று கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: As INDIA bloc hits wall in Bihar, Congress-SP alliance ‘off to a good start’ in UP

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், மகாகத்பந்தன் அரசாங்கத்தைக் கவிழ்த்து, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் திரும்பலாம் என்ற ஊகங்கள் நிறைந்திருக்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவின் அறிக்கை வந்துள்ளது.

காங்கிரஸுடனான எங்களின் நட்புறவு கூட்டணி 11 வலுவான இடங்களுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது. இந்த போக்கு வெற்றி சமன்பாட்டுடன் முன்னேறும். இந்தியாகூட்டணியும், ‘PDA’ உத்தியும் வரலாற்றை மாற்றும்,” என சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையின் 80 உறுப்பினர்கள் உ.பி.யில் இருந்து வந்தவர்கள். மக்களவைக்கு இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.,வுடனான உறவைத் துண்டித்த பின்னர் ஆகஸ்ட் 2022 இல் நிதிஷ் குமார் தனது முன்னாள் பரம எதிரியான லாலு பிரசாத் நிறுவிய ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் நுழைந்தார். பீகாரின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர், அதன்பிறகு, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பா.ஜ.க.,வை எதிர்கொள்ளும் முயற்சியில் இறங்கினார், இது எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை உருவாக்கியது. கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Akhilesh Yadav India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment