தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், இந்த வார இறுதியில் விவசாயிகளுடன் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இதில், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தெலங்கானாவில் விவசாயிகள் பெற்றுள்ள வளர்ச்சியை வெளிப்படுத்தவும், குஜராத் மாடல்-ஐ அகற்றவும் விவசாயிகள் களப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தப் பயணத்தில் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ்வும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. மேலும், விவசாயிகளுடனான சந்திப்பின்போது கே. சந்திரசேகர் ராவ், “விவசாயிகளின் நலன் கருதி, அவர்களின் துயர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தேசிய அளவில் 2024ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய டிஆர்எஸ் நிர்வாகிகள் மத்திய அரசு விவசாயிகளிடம் கேட்காமல் பண்ணைச் சட்டங்களை ஏற்றுகிறது, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்துகிறது, எரிபொருள் விலையேற்றம், கொள்முதலில் மாற்றம், சீரற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிராமம் முதல் நாட்டின் தலைநகர் வரை விவசாயிகளை ஒன்றிணைப்பது என்ற தீர்மானத்துடன் கூட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் தெலங்கானா விவசாயத் துறை அமைச்சர் எஸ் நிரஞ்சன் ரெட்டியும் கலந்துகொண்டார்.
அப்போது, “மாநிலத்தில் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. நெல் போன்ற பயிர்களை அரசே கொள்முதல் செய்கிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அரசு மாநிலத்தில் விவசாய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இந்தக் கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர்., பாஜகவினர் பெருமிதமாக கூறிக் கொள்ளும் குஜராத் மாடல் ஒரு தோல்வி மாதிரி எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜகவும், காங்கிரஸூம் கேசிஆர், தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சியை மட்டும் காட்டுகிறார் எனக் குற்றஞ்சாட்டினர்.
மேலும் அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜகவின் வளர்ச்சியை அக்கட்சி சுட்டிக் காட்டியது.
கே.சி.ஆர் உடனான சந்திப்புகளில் கலந்து கொண்டவர்களில் ரிது பந்து சமிதியின் தலைவர் பல்லா ராஜேஷ்வர் ரெட்டியும் ஒருவர். விவசாயிகள் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முதல்வரின் அழைப்பை அவர் ஆதரித்தார்.
விவசாயிகளுக்குள் "ஒரு பெரிய சக்தி" உள்ளது மற்றும் அதை வெளியே எடுக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கேசிஆர் கூறினார். “நமது பிரச்னைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். நான் தொடங்கிய தெலங்கானா இயக்கம் ஒன்றுபட்ட முயற்சியால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தது.
எனக்கு முன், தெலங்கானாவுக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளன, ஆனால் குறிப்பிட்ட செயல் திட்டம் இல்லாததால், மாநில அந்தஸ்து என்ற இலக்கை அடைய முடியவில்லை.
தற்போது, விவசாயத்தை அழித்து, சிறு விவசாயிகளை அழித்து, நாட்டின் விவசாயத் துறையை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் சதி நடைபெற்றுவருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, நெல் கொள்முதலில் கேசிஆர் மற்றும் மத்திய அரசு மோதிக் கொண்டன. தெலங்கானாவில் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளதால், நெல் பெருகியதால், மத்திய அரசை அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாநிலம் விரும்பியது.
ஆனால் அதனை மத்திய அரசு மறுத்தது. இந்த விவகாரத்தில் டிஆர்எஸ் அரசு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
இது குறித்து, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான முகமது அலி ஷபீர் கூறுகையில், விவசாயிகளுடனான சந்திப்புகள் "முழுமையாக மேடையில் நிர்வகிக்கப்பட்டன". “கடந்த எட்டு ஆண்டுகளில் தெலங்கானாவின் எந்த விவசாய சங்கத் தலைவர்களுடனும் கே.சி.ஆர் கூட்டத்தை நடத்தவில்லை.
ஆனால், ‘விவசாயிகளுக்கு ஆதரவானவர்’ என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, 25 மாநிலங்களின் பிரதிநிதிகளை சந்திக்க வசதி செய்துள்ளார்.
அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரின் குழுவினரால் இந்த விஜயமும் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “வெவ்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தலைவர்கள் எப்படி, ஏன் தெலங்கானாவிற்கு வருகை தந்தனர், அவர்களின் வருகைக்கான செலவுகள் மாநில அரசால் நிதியளிக்கப்பட்டதா இல்லையா என்பதை முதலமைச்சர் கேசிஆர் தெளிவுபடுத்த வேண்டும்.
டிஆர்எஸ் அரசாங்கம் "அதிகாரப்பூர்வ இயந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறது. தன்னுடைய சுய விளம்பரத்திற்காக
மல்லன்ன சாகர் மற்றும் காலேஸ்வரம் திட்டங்களை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தெலங்கானா அரசு அனுமதி மறுத்தது” என்பதையும் ஷபீர் இணைத்துப் பேசினார்.
தொடர்ந்து, “தங்கள் நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில், சில திட்ட ஒதுக்கீட்டாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் மல்லனா சாகரைப் பார்வையிட விரும்பினர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் காலேஸ்வரம் திட்டத்தை பார்வையிட விரும்பினர். ஆனால் மாநில அரசு அனுமதிக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குமார் கூறுகையில், தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கேசிஆர் பயப்படுகிறார். எனவே இதையெல்லாம் முயற்சி செய்கிறார். தெலங்கானா மக்களை தவறாக வழிநடத்துவது போல் அந்தக் கூட்டத்தில் விவசாய தலைவர்களை தவறாக வழிநடத்தியுள்ளார். இது ஒரு நாடகம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.