Advertisment

பெங்களூரு, டெல்லி கூட்டத்தில் ஆப்சென்ட்: இந்தக் கட்சிகளை கவனித்தீர்களா?

காங்கிரஸின் பெங்களூரு கூட்டம், பாஜகவின் டெல்லி கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சிகளும் உள்ளன.

author-image
WebDesk
New Update
As parties take their positions for 2024 the ones absent from both Bengaluru and Delhi

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.

2024 மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கண்களும் எதிர்க்கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கி காணப்பட்டன.
இதற்கிடையில் பெங்களூருவில் இரண்டாவது முறையாக கூடிய எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிட்டனர்.

Advertisment

தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. எனினும் சில முக்கிய கட்சிகள் நடுநிலை காரணமாக விலகி நிற்கின்றன.

மதசார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகத்தை அடிப்படையாக கொண்ட மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா வசம் செல்லவில்லை.

சிரோமணி அகாலி தளம்

பஞ்சாப்பை அடிப்படையாக கொண்ட சிரோமணி அகாலிதளம் இதுவரை தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இது பாரதிய ஜனதாவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக திகழ்ந்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸஸூடன் கூட்டணி இருக்கையை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி

மாயாவதி தலைமையிலான கட்சி ஒருபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சியாக இருந்ததில்லை, மேலும் பாஜகவை விமர்சித்தும் உள்ளது. எனினும் அந்தக் கட்சி எதிர்க்கட்சி கூடாரத்துக்கு செல்லவில்லை.

பிஜூ ஜனதா தளம்

ஒடிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஒரு கட்சி. இக்கட்சி நடுநிலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாரத ராஷ்ட்ரீய சமிதி

தெலங்கானாவில் ஆட்சி செய்யும் கட்சி. அக்கட்சியின் தலைவர் கே. சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார். இக்கட்சியை ராகுல் காந்தி பாரதிய ஜனதாவின் பி டீம் என அழைத்தார்.
எனினும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலிமையான நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்து வருகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை.
ஜெகன் மோகன் ரெட்டி 2010ல் காங்கிரஸில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் என்ற கட்சியை நிறுவினார்.

இந்திய தேசிய லோக் தளம்

இந்திய தேசிய லோக் தளம் 1998 முதல் 2004 வரை NDA வில் உறுப்பினராக இருந்தது. 2009 இல் மீண்டும் NDA வில் இணைந்தது. எனினும் அக்கட்சியால் ஹரியானாவில் சோபிக்க முடியவில்லை.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்

எதிர்க்கட்சியின் இரண்டு கூட்டங்களிலும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM கலந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ் இப்போது AIMIM ஐ பிஜேபியின் B கட்சி என்று விமர்சிக்கிறது. அதேநேரத்தில் வெளிப்படையான காரணங்களுக்காக பாஜகவின் கதவுகள் அதற்கு மூடப்பட்டுள்ளன.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

அஸ்ஸாமில் உள்ள முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி. இது, BJP மற்றும் அதன் கொள்கைகளை நன்கு விமர்சித்துவருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், AIUDF தலைவர் பதுருதீன் அஜ்மலை பாரதிய ஜனதாவின் வாய் என விமர்சித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Bangalore Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment