/tamil-ie/media/media_files/uploads/2021/06/petrol-diesel-price-express-photo-2-1200.jpg)
fuel consumption down : கொரோனா இரண்டாம் அலையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் அதிகமாகவே உள்ளது. பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதனால் பெட்ரோல், டீசல், மற்றும் விமான எரிபொருளின் நுகர்வு 25% குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
மார்ச் முதல் மே மாத கால கட்டத்தில் பொருட்களை எடுத்துச் செல்ல உருவாக்கப்படும் இ-வே பில்களும் 45 சதவிகிதம் குறைந்துவிட்டன என்பதை டிரான்ஸ்போர்ட்டர்களால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மாநிலங்களுக்குள்ளே வாகன நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பெட்ரோலியம் ப்ளானிங் மற்றும் அனாலசிஸ் செல் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) அறிவிப்பின் படி, விமான எரிபொருள் நுகவு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தில் 4,75,000 மெட்ரிக் டன், ஏப்ரல் மாதத்தில் 4,13,000 மெட்ரிக் டன் மற்றும் மே மாதத்தில் 2,63,000 மெட்ரிக் டன் குறைந்தது. குறைந்தபட்சம் 9 நாடுகளில் கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட பயணத்தடைகளின் விளைவு விமான போக்குவரத்து துறையால் உணரப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 1400 குழந்தைகள்
பல மாநிலங்கள் கொரோனா ஊரடங்கு விதிகளை அமல்படுத்த துவங்கியதின் விளைவாக பெட்ரோல் நுகர்வு மார்ச் மற்றும் மே மாத காலங்களில் 27% ஆக குறைந்தது. 27,40,000 மெட்ரிக் (மார்ச்), 23,86,000 மெட்ரிக் (ஏப்ரல்) மற்றும் 19,90,000 மெட்ரிக் (மே) என நுகர்வு இருந்தது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 மற்றும் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 95 என்று பெட்ரோல் விலை விண்ணை தொட்டுள்ள இந்த சமயத்தில் பெட்ரோல் நுகர்வு குறைந்துள்ளது.
சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களே அதிக அளவில் டீசலை பயன்படுத்துகின்றன. டீசலின் நுகர்வும் இந்த கால கட்டத்தில் 23.4% குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 72,24,000 மெட்ரிக் டன், ஏப்ரல் மாதத்தில் 66,83,000 மெட்ரிக் டன் மற்றும் மே மாதத்தில் 55,35,000 மெட்ரிக் டன் என்று நுகர்வு குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக மார்ச் மாதத்தில் 1,04,39,000 மெட்ரிக் டன் டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. ஏப்ரலில் நுகர்வு 10% குறைந்து 94 லட்சத்து 82 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. மே மாதத்தில் நுகர்வு மேலும் குறைந்து 77 லட்சத்து 89 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/fuel-consume.jpg)
தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று எரிபொருள்களின் பயன்பாடு (தனியார், வர்த்தக, சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டு காரணங்களுக்கான) மே மாதத்தில் 73 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் இருந்தது. இது ஏப்ரல் மாதம் இருந்த 42 லட்சத்து 79 ஆயிரம் மெட்ரிக் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 1,03,61,000 மெட்ரிக் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு, மே மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் சுருக்கத்தின் மற்றொரு குறிகாட்டியாக உருவாக்கப்படும் மின் வழி பில்களின் எண்ணிக்கை, இது ரூ .50,000 க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொண்டு செல்லும் போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய சாலை போக்குவரத்து சங்கங்களில் ஒன்றான அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் தொகுத்த தரவுகளின்படி, உருவாக்கப்பட்ட மொத்த இ-வே பில்கள் மார்ச் மாதத்தில் 7.12 கோடியில் இருந்து மே மாதத்தில் 3.99 கோடியாக குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 5.88 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டன.
தினசரி உருவாக்கப்படும் இ-வே பில்களின் வீழ்ச்சி மார்ச் மாதத்தில் 23 லட்சத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 20 லட்சமாகவும், மே மாதத்தில் 13 லட்சமாகவும் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களைக் காட்டிலும், உள் மாநில பயணங்களுக்கான இ-வே பில்களின் எண்ணிக்கை கூர்மையான வீழ்ச்சையை கண்டது. உள் மாநில பயணங்களுக்கு இ வே பில்கள் மார்ச் மாதத்தில் சராசரியாக 13.82 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டது, இது ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 11.93 லட்சமாக குறைந்தது. மே மாதத்தில் இது சராசரியாக 60 சதவீதம் குறைந்து ஒரு நாளைக்கு வெறும் 4.78 லட்சமாக இருந்தது.
நீட் தேர்வின் தாக்கம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு
ஒப்பிடுகையில், ஒரு நாளைக்கு உருவாக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான இ-வே பில்கள் ஒரு சிறிய சரிவை மட்டுமே கண்டன, இது மார்ச் மாதத்தில் 9.16 லட்சத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 7.66 லட்சமாக குறைந்தது - இது மே மாதத்தில் 8.11 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு தேசிய அளவிலான ஊரடங்கிற்கு பிறகு, உருவாக்கப்பட்ட இ-வே பில்களின் எண்ணிக்கை 2020 ஏப்ரலில் 86 லட்சமாகவும், மே மாதத்தில் 2.55 கோடியாகவும் இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.