Advertisment

ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒற்றுமையை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்; டி.எம்.சி, பி.ஆர்.எஸ் ஆப்சென்ட்

முதல்வர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னையில் தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒற்றுமையை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்; டி.எம்.சி, பி.ஆர்.எஸ் ஆப்சென்ட்

தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் நேற்று (மார்ச் 1) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தேசிய கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினர். தேசிய மாநாட்டுத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தமிழக முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மாநிலத்தை கட்டமைத்தவாறு நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.

Advertisment

இந்த நிகழ்வு தமிழக முதல்வரை எதிர்க்கட்சிகளின் தேசிய முகங்களில் ஒருவராக முன்னிறுத்துவதற்கும், "ஒத்த எண்ணம் கொண்ட" எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரு தளம் அமைக்க வாய்ப்பாக அமைந்தது. தி.மு.க தலைவர் நிர்வாக ரீதியாக சில சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில் பரூக் அப்துல்லாவைத் தவிர காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), மற்றும் இடதுசாரிகள் பங்கேற்கவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான தேசியக் கூட்டணியில் காங்கிரஸுக்கு இணக்கமான கட்சிகள் விருந்தினர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸின் பாரம்பரிய எதிரிகளான திரிணாமுல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி காங்கிரஸின் பங்கை ஒதுக்குகின்றன.

தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், பா.ஜ.கவிற்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவை எதிர்கொள்ள தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்குவதும் ஆகும் என்றார்.

பிரதமர் யார் என்பதன் தேர்வை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்துல்லா கூறினார்.

அப்துல்லாவிடம், வருங்கால பிரதமர் வேட்பாளர்கள் குறித்து கேட்டபோது, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வெற்றி பெற்ற பிறகு, சரியான நேரத்தில் தேசத்தை வழிநடத்தவும், ஒன்றிணைக்கவும் சிறந்த மனிதரை முடிவு செய்ய முடியும் என்றார். ஸ்டாலின் பிரதமராக முடியுமா என்ற கேள்விக்கு, “ஏன் முடியாது? அவர் ஏன் பிரதமராக முடியாது?"

என்று கூறினார்.

தி.மு.க கூட்டத்தில் பேசிய என்.சி கட்சி தலைவர் அப்துல்லா, "ஸ்டாலின் இது முன்னேற வேண்டிய நேரம். தேசிய அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் இந்த அரசை கட்டியெழுப்பியது போல் தேசிய அரசியலுக்கு வந்து நாட்டை கட்டியெழுப்புங்கள். தேசத்திற்கு ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர்கள் தேவை, மேலும் கார்கேஜியிடம் நான் கூறுவேன், 'யார் பிரதமராகப் போகிறார் என்பதை மறந்துவிடுவோம். முதலில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம், பிறகு யார் பிரதமராக வருவார்கள் என்று சிந்திப்போம்" என்றார்.

தொடர்ந்து கார்கே கூறுகையில், "பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். யார் தலைமை ஏற்பார்கள், யார் பிரதமர் என்று நான் கூறவில்லை.

அது கேள்வியல்ல. நாம் ஒற்றுமையாக போராட வேண்டும், அதுவே எங்கள் விருப்பம். அதனால்தான் மதச்சார்பற்ற பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும், கருத்துச் சுதந்திரத்தின் பெயரிலும் நாம் பலமுறை தியாகம் செய்துள்ளோம்".

ஸ்டாலின் அரசின் பணிகளைப் பாராட்டிப் பேசிய அகிலேஷ் யாதவ், "எதிர்கால சந்ததியினரை நீதியை நோக்கி கொண்டு செல்ல மற்ற தலைவர்களுடன் நானும் ஒன்றுபடுகிறேன். அவர் அரசியலில் பெரிய உயரத்திற்கும் தேசிய முக்கியத்துவத்திற்கும் உயருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

தமிழக முதல்வர் தனது உரையில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கேள்வியை விட, "யார் ஆட்சியைப் பிடிக்கக்கூடாது" என்பதுதான் நாடாளுமன்றத் தேர்தல் என்றார்.

மாநில கூட்டணி கட்சி தலைவர்கள், இடதுசாரிகள் இல்லை

டி.எம்.சி, பி.ஆர்.எஸ் தவிர, மாநிலத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க), தொல் திருமாவளவன் நிறுவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதற்க திமுக மூத்த நிர்வாகி கூறுகையில். தமிழகத்தில் உள்ள எங்கள் கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்து விட்டு சென்றனர். தேசிய தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் அவர்கள் மேடைக்கு வராமல் இருக்கலாம் என்று கூறினார்.

மேலும் சமீப காலமாக திமுக நிகழ்ச்சிகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் இன்று அழைக்கப்பட வில்லை என்று கேட்டதற்கு, காங்கிரஸ் தலைவருடன் அவர் மேடையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கேரளாவில் பினராயி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசை, ஊழல் வழக்குகளில் தொடர்ந்து காங்கிரஸ் குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வாரம் கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பினராயியுடன் ஸ்டாலின் ஒரே மேடையில் அமர்ந்து பேசுவார் என்று கூறினார். எனினும் அது தி.மு.க நிகழ்வாக இருக்காது என்றார்.

தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், "ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு பிரதானமாக நாங்கள் அழைக்கப்படவில்லை. திமுக ஒருவேளை மற்ற தேசிய தலைவர்களுடன் இணைந்து ஸ்டாலினுக்கான பிரத்யேக தேசிய முகத்தை உருவாக்க விரும்புகிறது என்று இருக்கலாம்" என்றார்.

கேசிஆர் (தெலுங்கானா முதல்வர் மற்றும் பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ்) மற்றும் (டிஎம்சி தலைவர்) மம்தா பானர்ஜி போன்றவர்கள் தேசிய அரசியலில் காங்கிரஸ் இல்லாமல் தங்கள் சொந்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Dmk Leader Stalin All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment