Advertisment

லக்கிம்பூர் வன்முறை: குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்

ஆசிஷ் மிஸ்ராவுக்கு 2 ஆவது முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று லக்கிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
லக்கிம்பூர் வன்முறை: குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் விசாரணைக்கு ஆஜராக கோரி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு 2 ஆவது முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று லக்கிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராகியுள்ளார். அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, லக்கிம்பூர் மாவட்ட எஸ்பி பதிலளிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.
லக்கீம்பூா் வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு ஆசிஷ் மிஸ்ராவுக்கு காவலர்கள் சம்மன் அனுப்பியிருந்தனர். 
ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாதது விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில், லகிம்பூர் வன்முறை வழக்கை உத்தரப் பிரதேச அரசு கையாளும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தது. இதையடுத்து அவர் வீட்டின் முன்பு சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இரண்டாவது முறையாக போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். அதில், "இம்முறையும் ஆஜராக தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தனர்.
லக்னோ மண்டலம் ஏடிஜி சத்யா நரேன் சபாத், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "வெள்ளிக்கிழமை இரண்டாவது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், இதுவரை 10 பேரின் பெயர்கள் இந்தச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
10 பேரில் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற மூவரும் இறந்துவிட்டனர்" என தெரிவித்தார்.

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Lakhimpur Violence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment