முடிவுக்கு வந்தது இழுபறி… ராஜஸ்தான் முதல்வர் – துணை முதல்வர் தேர்வு

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் பதவியில் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் பதவியில் சச்சின் பைலட் தேர்வு செய்து ராகுல் காந்தி தலைமையில் முடிவு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக…

By: Published: December 14, 2018, 5:02:18 PM

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் பதவியில் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் பதவியில் சச்சின் பைலட் தேர்வு செய்து ராகுல் காந்தி தலைமையில் முடிவு.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் – துணை முதல்வர் தேர்வு

பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், 19 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தேவையாகவும் இருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வாகியுள்ளார். விரைவில் இவர்களுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Ashok gehlot appointed as rajasthan cm sachin pilot to be his deputy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X