அசோக் கெலாட்டின் நெருங்கிய வட்டத்தில் உள்ள 9 பேர் இப்போது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இந்த வரிசையில் மேலும் இருவர் இணைந்ததால், ராஜஸ்தான் முதல்வரின் மகன் மற்றும் சகோதரர் நெருக்கமான ஆதரவாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரை பட்டியல் இதோ.
ஆங்கிலத்தில் படிக்க: The 9 within Ashok Gehlot’s close circle now facing charges
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சுயேச்சை எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஹட்லா ஆகியோருக்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (இ.டி) நடத்திய சோதனையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு நெருக்கமானவர்கள், முக்கியமாக மத்திய அமைப்புகளால் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 10 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கெலாட்டும், காங்கிரசும், பா.ஜ.க மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை அடிப்படையற்றது என்று நிராகரிக்கிறது. ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் ராம்லால் சர்மா கூறுகையில், “அசோக் கெலாட்டிடம் இரண்டு சட்டங்கள் உள்ளன. ஒன்று இந்திய தண்டனைச் சட்டம், அவர் பின்பற்ற விரும்பாதது, மற்றொன்று கெலாட் தண்டனைச் சட்டம், விசாரணையின்றி அவர் ஒரு முடிவுக்கு வந்து கறைபடியாத தூய்மையானவர் என்ற பெயரைக் கொடுக்கிறார்.” என்று கூறினார்.
2018 டிசம்பரில் கெலாட் பதவிக்கு வந்ததில் இருந்து வழக்குகளை எதிர்கொள்ளும் ஒன்பது தலைவர்கள்:
அக்ரசைன் கெலாட், முதலமைச்சர் கெலாட்டின் சகோதரர்
அவரது போட்டியாளரான சச்சின் பைலட் எழுப்பிய கிளர்ச்சியைத் தொடர்ந்து கெலாட் அரசாங்கம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்த நேரத்தில், ஜோத்பூரில் உள்ள அக்ரசைனுடன் தொடர்புடைய இடங்களில் ஜூலை 2020-ல் சோதனையிடப்பட்டது. உரங்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மோசடியின் ஒரு பகுதியாக இ.டி நாடு தழுவிய சோதனைகளை நடத்தியது. பின்னர், விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட்டது. மேலும், அக்ரசைனின் நிறுவனமான அனுபம் கிரிஷியின் பல சொத்துக்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜூலை 2020 காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியில் பா.ஜ.க-வின் தூண்டுதல் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இ.டி அதிகாரிகளின் கருத்துப்படி, 2007 மற்றும் 2009-க்கு இடையில், அங்கீகரிக்கப்பட்ட உர வியாபாரியான அக்ரசென், மானிய விலையில் அதை வாங்கி விவசாயிகளுக்குப் பதிலாக நிறுவனங்களுக்கு விற்றது. அந்த நிறுவனங்கள் பின்னர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு உரங்களை தொழில்துறை உப்பாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.
அக்ராசைனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து, நிறுவனங்கள் சட்டத்தை மீறியதாகவும், அவர்களுக்கு ஏற்றுமதி பற்றிய அறிவு இல்லை என்றும் கூறினர்.
ஜூன் 2022-ல், இந்த வழக்கில் சி.பி.ஐ-யால் அக்ரசைனின் சொத்துக்கள் மீண்டும் சோதனை செய்யப்பட்டன.
வைபவ் கெலாட், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன்
மயங்க் சர்மா எண்டர்பிரைசஸ் (எம்.எஸ்.இ) மற்றும் ஓம் கோத்தாரி குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஒன்பது அலுவலகங்களை வருமான வரித்துறை துறை சோதனை செய்ததன் மூலம், ஜூலை 2020 நெருக்கடியின் போது அவரது பெயரும் மத்திய அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் வந்தது. எம்.எஸ்.இ குழுமம் ரத்தன் காந்த் ஷர்மாவின் குடும்பத்திற்குச் சொந்தமானது, அவர் மார்ச் 2011-ல் சன்லைட் கார் ரெண்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பாதிப் பங்குகளை வாங்கியிருந்தார், வைபவ் அந்த நிறுவனத்தில் மார்ச் 31, 2016 வரை அதன் பங்குதாரராக இருந்தார். எம்.எஸ்.இ ஜெய்ப்பூரில் ஆடம்பர ஹோட்டலான லி மெரிடியன்-ஐ (Le Meridien)நடத்துகிறது. ஷர்மா, ஜெய்ப்பூரின் புறநகரில் உள்ள ஃபேர்மாண்ட் என்ற சொகுசு ஹோட்டலை நடத்தும் ட்ரைடன் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் விளம்பரதாரராகவும் உள்ளார். இது இ.டி.-ஆல் சோதனை செய்யப்பட்டது , அதில் வைபவ் ஒருமுறை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தபடி, அதே வழக்கு தொடர்பாக வைபவ் இப்போது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) கீழ் இ.டி மூலம் சம்மன் பெற்றுள்ளார்.
மார்ச் 2022-ல், வைபவ் ஏமாற்றுதல், நம்பிக்கை மீறல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் எஃப்.ஐ.ஆரை எதிர்கொண்டார். இருப்பினும், புகார்தாரர் பின்னர் வழக்கை கைவிட்டார்.
ராஜேந்திர சிங் யாதவ், மாநில உள்துறை அமைச்சர்
மதிய உணவு ஊழல் தொடர்பாக யாதவ் மீது ஐடி மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கோவிட் தொற்றுநோய்களின் போது ராஜஸ்தானில் மதிய உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி தொடர்பானது, ராஜேந்திர சிங் யாதவின் மகன்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சில பொருட்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
2022 செப்டம்பரில் வருமானவரித் துறை சோந்தனைகள் நடத்தப்பட்ட நிலையில், இ.டி சோதனைகள் கடந்த மாதம் நடந்தன.
ராஜேந்திர சிங் யாதவ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். “இப்போது ஒரு மத்திய நிறுவனம் பொருள்களை அதிக விலைக்கு அல்லது மலிவான விலையில் (ஒரு நிறுவனத்திடம் இருந்து) வாங்கினால் அல்லது மோசடி நடந்தால், மூன்றாம் தரப்பினருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். “எனது குழந்தைகள் மூலப்பொருட்களை தொடர்ந்து விநியோகம் செய்கிறார்கள், ஆனால் யாரேனும் அவைகளில் இருந்து கலப்படம் உருவாக்கினால் அது அவர்களுக்கு எப்படி கவலை அளிக்கும்? யாராவது ஹல்வாயில் இருந்து இனிப்புகளை எடுத்து எருமைக்கோ அல்லது மனிதருக்கோ கொடுத்தால், அது ஹல்வாயை எப்படிப் பாதிக்கும்?” என்று கேட்கிறார்.
கெலாட்டின் நெருங்கிய ஆதரவாளர் தர்மேந்திர ரத்தோர்
2020 நெருக்கடியின் போது முதலில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளைப் பார்த்தார், அப்போது அவரது அலுவலகங்கள் மற்றும் சொத்துக்களை ஐடி மீண்டும் சோதனை செய்தது. முதல்வரின் ஆதரவாளர் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (RTDC) தலைவராக பிப்ரவரி 2022-ல் நியமிக்கப்பட்டார். மே 17, 2022-ல் ஜெய்ப்பூரில் ரத்தோர் ஏற்பாடு செய்த ஆசாதி கௌரவ் யாத்ரா பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, கெலாட் கூறியது: “யே பீ ஃபேமஸ் ஹோ கயே , இன்கே பி சாபா பட் கியா (ரத்தோரும் பிரபலமாகிவிட்டார், அவரும் ரெய்டு செய்யப்பட்டார்)” என்று கூறினார்.
ராஜீவ் அரோரா, கெலாட்டின் ஆதரவாளர்
ஆம்ரபாலி ஜூவல்ஸின் நிறுவனரும் உரிமையாளருமான அரோராவும் 2020 நெருக்கடியின் போது வருமானவரித் துறை கண்காணிப்பின் கீழ் வந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர், இவர் ராஜஸ்தானில் என்.எஸ்.யு.ஐ ( NSUI) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர், முன்னாள் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆவார்.
அவர் பல்வேறு காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது ராஜஸ்தான் சிறு தொழில் கழகத்தின் தலைவராக உள்ளார்.
லோகேஷ் சர்மா, கெலாட்டின் சிறப்பு அதிகாரி (OSD)
2021 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின், தொலைபேசி உரையாடலை சட்டவிரோதமாக இடைமறித்து கேட்டது தொடர்பாக தாக்கல் செய்த எப்.ஐ.ஆரை சர்மா எதிர்கொள்கிறார், இது தொடர்பாக டெல்லி காவல்துறை அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை அவர் 5 முறை ஆஜராகியுள்ளார்.
ஜூலை 2020 நெருக்கடியின் போது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக மார்ச் 2021 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் ஷர்மாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான குரல் பதிவு ஆடியோ கிளிப்களைப் பரப்பியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இவரைப் பாதுகாத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தரிவால், சட்டசபையில் நடந்த விவாதத்தில் பேசியதாவது: லோகேஷ் சர்மாவுக்கு ஏதாவது கிடைத்து, அதை வாட்ஸ்அப் குழுவில் அனுப்பினால், அவர் என்ன பாவம் செய்தார்? நீங்கள் செய்ய மாட்டீர்களா? அவர் ஏன் அனுப்பக்கூடாது?...அவர் அதை வைரல் செய்தார் என்று சொல்கிறீர்கள், அதை ஏன் அவர் வைரலாக்கக்கூடாது? லோகேஷ் சர்மா ஆடியோ கிளிப்பிங்ஸ் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆதாரம் கொடுங்கள்.” என்று கூறினார்.
அக்டோபர் 10-ம் தேதி நடந்த சமீபத்திய சுற்று விசாரணைக்குப் பிறகு, சர்மா பத்திரிகையாளர்களிடம் கூறினார்: “தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். நான் சமூக ஊடகங்கள் மூலம் ஆடியோ கிளிப்களைப் பெற்று அவற்றை பரப்பினேன், ஏனெனில் உரையாடல்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி இருந்தது.” என்று கூறினார்.
மகேஷ் ஜோஷி, கேபினட் அமைச்சர்
2020 காங்கிரஸ் அரசு எதிர்கொண்ட நெருக்கடியின் போது, ஜோஷி கெலாட்டின் நம்பிக்கையான ஆதரவாளராக இருந்தார், இது நவம்பர் 2021-ல் அவர் கேபினட் அமைச்சராக உயர்த்தப்படுவதற்கு வழிவகுத்தது. 2021-ம் ஆண்டில், ஷெகாவத்தின் எஃப்.ஐ.ஆர் தொடர்பாக ஜோஷியை டெல்லி காவல்துறை வரவழைத்தது, ஆனால் அவர் அதைத் தவிர்த்துவிட்டார். கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்கில் அவரது மகன் ரோஹித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜனவரி 8, 2021 மற்றும் ஏப்ரல் 17, 2022 க்கு இடையில் பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவர்களது உறவு இருவம் மனம் ஒத்து நடந்தது என்று கூறியுள்ளது. அந்த பெண் அவரை “பிளாக்மெயில்” செய்கிறார் என்று கூறியது.
கோவிந்த் சிங் தோதாஸ்ரா, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்; சுயேச்சை எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஹட்லா
காங்கிரஸில் இருந்து சீட்டு பெற்ற தோதாஸ்ரா மற்றும் ஹட்லாவுடன் தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை இ.டி சோதனை நடத்த இறங்கியது. தோதாஸ்ராவுக்கு எதிராக இ.டி நடவடிக்கை எடுத்தது, அவரது மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது, தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படும் என்று அவரது அரசாங்கம் அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை வந்துள்ளதாக கெலாட் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இ.டி-யிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்றாலும், தோதாஸ்ரா மற்றும் ஹட்லா மீதான சோதனைகள் 2021 ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (REET) தாள் கசிவு தொடர்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரிடமும் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
பத்து மணிநேர சோதனைகளின் முடிவில், ஹட்லா தனக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்திய இ.டி, “1 ரூபாயைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.” என்று கூறினார்.
பா.ஜ.க-வின் ராஜ்யசபா எம்.பி கிரோடி லால் மீனா இந்த சோதனைகளுக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டிய ஹட்லா, “ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேர்வில் நான் 1 ரூபாயாவது பரிவர்த்தனை செய்தேன் என்ற குற்றச்சாட்டை உங்களால் அல்லது இ.டி-யால் நிரூபிக்க முடிந்தால், அதே நாளில் நான் தற்கொலை செய்துகொள்வேன். ” என்ரு கூறியதோடு தன்னை எதிர்த்து கிரோடி லால் மீனா மஹ்வா தொகுதியில் போட்டியிடுமாறு சவால் விடுத்தார்.
தோதாஸ்ரா மற்றும் ஹட்லா இருவரும் சிகாரில் உள்ள லக்ஷ்மங்கர் மற்றும் தௌசாவில் உள்ள மஹ்வா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். சமீபத்தில், ஒரு பொது பேரணியில் உரையாற்றிய கெலாட், தனது அரசாங்கத்தை ஆதரிக்கும் ஹட்லாவுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.