தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியில் துணைத் தலைவராக சேர்வதற்கு செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் ஆணையத் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா பிலிப்பைன்ஸைத் தளமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கியில் துணைத் தலைவராக சேர்வதற்காக, தனது தேர்தல் ஆணையர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த அசோக் லாவாசா தன்னை ஆகஸ்ட் 31ம் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார். குடியரசுத் தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
குடியரசுத் தலைவரின் பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் சிங் இது குறித்து தனக்கு தெரியாது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆசிய வளர்ச்சி வங்கி ஜூலை 15ம் தேதி அசோக் லவாசாவின் நியமனத்தை அறிவித்தது. “அவர் (லாவாசா) மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் விரிவான அனுபவம் கொண்டவர். பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்” என்று கடந்த மாதம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
தனியார் துறை நடவடிக்கைகளுக்கும் பொது-தனியார் கூட்டாண்மைக்கும் பொறுப்பு வகித்த துணைத் தலைவர் திவாகர் குப்தாவுக்கு பதிலாக அசோக் லவாசா இணைய உள்ளார். திவாகர் குப்தா தனது பதவிக் காலத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவு செய்கிறார்.
ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழுவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் தலைமை தாங்குகிறார். ஒரு துணைத் தலைவர் 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். அது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அசோக் லாவாசாவுக்கு அவருடைய பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அவர் பதவியில் தொடர்ந்திருந்தால் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையராக (சி.இ.சி) ஓய்வு பெற்றிருப்பார்.
அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையராக தொடர்ந்து இருந்தால் அவர் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தியிருப்பார். அவர் முன்கூட்டியே பதவியில் இருந்து வெளியேறுவது தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் இது 2வது நிகழ்வு ஆகும். அவருடைய இடத்துக்கு அவரை அடுத்துள்ள சுஷில் சந்திரா வருகிறார்.
1973ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நாகேந்தர் சிங் தேர்தல் ஆணையத்தில் அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே அவர் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது லவாசா தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், ஊடகங்களில் அவருடைய பெயர் இடம் பெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, லவாசாவின் மனைவி உள்பட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் வருவானவரித்துறை சோதனையின் கீழ் வந்தனர். அவர்கள் தங்களுடைய வருமானத்தை தெரிவிக்கவில்லை மற்றும் சொத்துக்களின் மதிப்புகளைக் காட்டவில்லை என்றும் வருமானவரித்துறை குற்றம் சாட்டியது.
அவரது மகன் அபிர் லவாசாவின் நிறுவனம் (ஆர்கானிக் நவ்ரிஷ்) மற்றும் குழந்தை மருத்துவரான அசோக் லவாசாவின் சகோதரி சகுந்தலா லவாசா ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது. அப்போது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வருமானவரித் துறையின் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
அசோக் லவாசா ஜனவரி 23, 2018 அன்று தேர்தல் ஆணையராக சேர்ந்தார். ஹரியானா மாநில 1980ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அவர் நிதி செயலாளராக ஓய்வு பெற்றார். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சிவில் விமான செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2001-02 ஆம் ஆண்டில் பொருளாதார விவகாரத் துறையின் இணைச் செயலாளராகவும் ஆசிய வளர்ச்சி வங்கி தொடர்பான விவகாரங்களையும் அவர் கவனித்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Ashok lavasa resigns as election commissioner for joining vice president at asian development bank
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!