Assam Bogibeel bridge : 1997ம் ஆண்டு, ஜனவரி 22ம் தேதி அசாம் மாநிலத்தில் இருக்கும் போகிபீல் என்ற இடத்தில் ரயில் மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் எச்.டி. தேவகவுடா. ஆனாலும், வாஜ்பாய் பிரதமராக வந்த பின்பு தான், 2002ல் (ஏப்ரல் 21 ) இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகின. இந்த பாலம் பற்றி வெளியில் பலருக்கும் தெரியாத சில தகவல்கள் இங்கே!
Advertisment
Assam Bogibeel bridge Interesting facts - போகிபீல் பாலம் சுவாரசியமான தகவல்கள்
1. ஆசியாவின் மிக நீளமான இரண்டாவது பாலம்
Advertisment
Advertisements
இந்த ரயில் மேம்பாலம் தான் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலம். இதன் நீளம் 4.9 கி.மீ ஆகும். ஆசியாவிலேயே இரண்டாவது மிக நீளமான மேம்பாலம் இதுவாகும்.
2. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் ஓடும் பிரம்மபுத்திரா நதிக்கு மேலே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் இதன் கட்டுமானப் பணிகள் தாமதமானது. வருடத்தில் அக்டோபர் துவங்கி மார்ச் மாதம் வரை வெள்ளப் பெருக்கு இருக்கும் காலமாகும். இதனால் கட்டுமானப் பணிகள் மிகவும் தொய்வானது.
Take a look at the stunning visuals of how the iconic Bogibeel Bridge, India's longest rail-cum-road bridge, was built by the best of our engineering minds pic.twitter.com/3xrPltY6Ol
அசாம் மாநிலத்தின் திப்ருகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை, அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோடு இணைக்க இந்த பாலம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் 4 மணி நேர பயணமும், 170 கி.மீ பயண தூரமும் இனிமேல் தேவையில்லை.
4. இரட்டை போக்குவரத்து மேம்பாலம்
கீழ்தட்டில் இருக்கும் பாலமானது ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும். ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலே இருக்கும் பாலம் சாலை போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று வழிச் சாலை அது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான மேம்பாலம்
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் நாடுகளில் அமைந்திருக்கும் பாலங்களைப் போலவே இந்த பாலங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
6. ஒதுக்கப்பட்ட நிதி
ஆரம்பத்தில் 4.31 கி.மீ தான் பாலம் போடுவதாக திட்டம். அதற்காக ஆன செலவு மட்டும் ரூ. 3,200 கோடி ஆகும். அதன் பின்னர் பாலத்தின் நீளம் அதிகரித்தது. 4.9 கி.மீ பாலத்தை உருவாக்க ரூ. 5,900 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
7. அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக
கட்டுமானப் பணிகள் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பணியாற்றும் போது தான் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளன்று இந்த மேம்பாலம் திறக்கப்படுகிறது.
8. பொருட்செலவு
30 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் இந்த கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 19,250 மீட்டர்கள் நீளம் கொண்ட எஃகு பொருட்கள் இதன் கட்டுமானத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
9. பொருளாதார மேம்பாடு
வடகிழக்கு மாநிலத்தில் வசிப்பவர்களுக்கான பொருளாதாரத்தை நிச்சயம் இந்த சாலைகள் மேம்படுத்தும்.
10. ராணுவ தேவைகளுக்கு
சீனாவிற்கு மிக அருகில் இந்த பாலம் அமைவதால், தடவாள நடவடிக்கைகள், மற்றும் இதர ராணுவ நடவடிக்கைகளை எளிதில் கண்டறிய இது உதவும். மேலும் ஒரே நேரத்தில் மூன்று ராணுவ விமாத்தினை இந்த மேம்பாலத்தில் தரையிறக்க முடியும்.