scorecardresearch

73 வயது மருத்துவரை தாக்கிய தோட்ட தொழிலாளிகள்… அசாமில் நாளை மருத்துவர்கள் போராட்டம்

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மருத்துவரை அழைத்துச் செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸையும் உள்ளே நுழையவிடவில்லை

73 வயது மருத்துவரை தாக்கிய தோட்ட தொழிலாளிகள்… அசாமில் நாளை மருத்துவர்கள் போராட்டம்
Assam doctors strike Dr Deban Dutta died

Abhishek Saha

Assam doctors strike Dr Deban Dutta died  :அசாம் மாநிலத்தின் ஹோர்ஹத் மாநிலத்தில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் பரந்து விரிந்திருக்கின்றன. தேயிலைத் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்று சக தொழிலாளர்கள் அவரை அருகில் இருக்கும் தேயிலை தோட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சோம்ரா மாஜி என்ற 32 வயது தொழிலாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, மருத்துவர் தீபன் தத்தா மதிய உணவிற்காக வெளியே சென்றிருந்தார்.

சோம்ரா மாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அங்கிருந்த செவிலியர் அவருக்கு தேவையான முதலுதவிகள் அனைத்தையும் அளித்துள்ளார். உணவை முடித்துக் கொண்டு திரும்பிய தீபன் தத்தா நோயாளியை பரிசோதனை செய்த போது, அவர் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. 73 வயதான மருத்துவரை, முதியவர் என்றும் பாராமல் அந்த தோட்டத் தொழிலாளிகள் ஒன்று கூடி அவரை தாக்கியுள்ளனர். கண்ணாடி துண்டுகளை வைத்து அவரது உடலை கூறு போட்டும் உள்ளனர். இதனால் பலத்த காயத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளானார் மருத்துவர் தீபன் தத்தா. மேலும் மருத்துவமனையும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை காப்பாற்றி அருகில் இருக்கும் ஜோர்ஹத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மருத்துவரின் உயிர் பிரிந்துவிட்டதாக ஜோர்ஹத் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாந்த் அறிவித்தார்.

73 வயது மதிக்கத்தக்க மருத்துவர் தாக்குதலில் மரணம்

மாஜி இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, மாலை 4 மணிப் பொழுதில் மருத்துவமனைக்குள் நுழைந்த தேயிலை தோட்ட தொழிலாளிகள் மருத்துவமனையை சுக்கு நூறாக நொறுக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்றவர்களுக்கும் சரமாரியான அடி கிடைத்துள்ளது. இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனங்களை மருத்துவ அசோசியேசன்கள் அறிவித்துள்ளனர்.

அசாம் சாய் மஸ்தூர் சங்கம் (Assam Chai Mazdoor Sangha (ACMS)) என்ற, அசாமின் மிகப் பெரிய தேயிலை தொழிற்சங்கத்தின், ஜொர்ஹாத் செயலாளர் நிலேஷ் கோந்த் “மாஜி கழிவறையில் வழுக்கிவிட்டு கீழே விழுந்துள்ளார். பலத்த அடி மற்றும் அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கும். மதிய உணவுக்காக வெளியே சென்ற மருத்துவர் அரை மணி நேரத்திலேயே திரும்பி வந்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு முன்பே மாஜி இறந்துவிட்டார்… கோபம் கொண்ட தோட்டத் தொழிலாளிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

இந்த நிகழ்வை கண்டித்து இந்திய மருத்துவ கழகம் (Indian Medical Association)  மற்றும் அசாமின் மருத்துவ சேவை அசோசியேசன் நாளை ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு துவங்கும் போராட்டம் 4ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

செவ்வாய் கிழமை மாலை 7 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, அமைதியான முறையில் அஞ்சலி நடைபெற உள்ளாது. இந்த சம்பவம் நடைபெற்ற தேயோக் என்ற தேயிலை தோட்டம் கொல்கத்தாவை சேர்ந்த Amalgamated Plantations Private Limited நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை சீராகும் வரையில் அந்த தோடத்தில் எந்த வேலையும் நடைபெறாத வகையில் லாக்-அவுட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 21 நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மருத்துவரை அழைத்துச் செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸையும் உள்ளே நுழையவிடவில்லை.

சமீபத்தில் கொல்கத்தாவில் பரபரப்பாக இயங்கி வரும் என்.ஆர்.எஸ் (Nil Ratan Sircar (NRS) என்ற மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், 80 வயது நோயாளி ஒருவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து ஜூனியர் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Assam doctors strike dr deban dutta died after tea garden workers attacked him 21 persons were detained