கொரோனா காலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை : அசாம் வெள்ளத்திற்கு 20 பேர் பலி

கஸிரங்கா தேசிய பூங்காவின் 40% நீரால் சூழப்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Assam Flood 2020 23 out of 33 districts inundated with floodwater : தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்களில் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அசாமில் பெய்யும் கனமழையால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாவது வழக்கம். இம்முறை பெய்த மழையால் 33 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இதுவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் அளவுக்கு அதிகமாக வெள்ள நீர் புகுந்துள்ள காரணத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்கள் முகாம்களுக்கும், பாதுகாப்பான பகுதிகளுக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்ற நிலையில் இந்த வெள்ள பாதிப்பு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருங்கள் அதிகம் வாழும் பகுதியான கஸிரங்கா பூங்காவில் 40% வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவியுள்ள நிலையில், அவை பொது இடங்களுக்கு வரும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close