/tamil-ie/media/media_files/uploads/2020/10/Buck.jpg)
Assam’s Kaziranga opens to tourists after nearly eight months : 8 மாதங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாமல் இருந்த அசாமின் கசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகங்களுக்காக பெயர் பெற்ற இந்த பூங்காவிற்கு வருகை புரியும் சுற்றுலாவாசிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில், வெள்ள காலங்களில் அசாம் தேசிய பூங்கா மற்றும் சரணாலயங்கள் 5 மாதங்களுக்கு மூடிய நிலையில் தான் இருக்கும். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1988ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட 6வது மிகப் பெரிய வெள்ளத்தின் காரணமாக 150க்கும் மேற்பட்ட விலங்களுகள் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை!
மாஸ்க் அணிந்து கொள்ளுதலும், சானிட்டைஸர்களை பயன்படுத்துதலும் மிகவும் முக்கியமாக உள்ள நிலையில், வருகையின் போதே பார்வையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு அருகில் இருக்கும் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 ஜீப்களில் மட்டுமே சஃபாரி செல்ல இயலும். குறைந்த பட்சம் 500 மீட்டர் இடைவெளி விட்டு ஜீப்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டியில் இருந்து இறங்கவோ, கூட்டம் கூடவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் யானை சஃபாரி ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.