Advertisment

அசாம் - மிசோரம் எல்லைக் கலவரம் : முதல்வர் மீதே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த காவல்துறை

எல்லைப் பிரச்சினைகளை படை மூலம் தீர்க்க முடியாது. பரஸ்பர உரையாடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
அசாம் - மிசோரம் எல்லைக் கலவரம் : முதல்வர் மீதே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த காவல்துறை

Tora Agarwala , Deeptiman Tiwary

Advertisment

Assam, Mizoram summon each other’s officials : கடந்த திங்கள் கிழமை அன்று 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அசாம் - மிசோரம் எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட நிலையில், மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் 6 காவல்துறையினருக்கு சம்மன் அனுப்பியது. மேலும் அம்மாநிலத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய காவல்துறையை அனுப்பியுள்ளது அசாம் மாநிலம்.

அசாமி கச்சார் மாவட்டத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் கோலாசிப் மாவட்ட காவல்துறை இதற்கு பதில் அளிக்கும் வகையில், கலவரம் ஏற்பட்ட ஜூலை 26 தேதி அன்று, அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மற்றும் 6 அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்கெட்டே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஷர்மா, ஐஜிபி அனுராக் அகர்வால், டிஐஜி கச்சர் தேவஜோதி முகர்ஜி, டிசி கச்சர் கீர்த்தி ஜல்லி, டிஎஃப்ஓ கச்சார் சன்னிடியோ சவுத்ரி, எஸ்பி கச்சர் சந்திரகாந்த் நிம்பால்கர், ஓசி தோலை காவல் நிலையம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 307/120-B/270/325/326 மற்றும் 353/336/334/448/34 மற்றும் வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை (BEFR) பிரிவு 3 மற்றும் பிரிவு 3 மற்றும் கோவிட் -19 சட்டத்தின் மிசோரம் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27 (1) (அ) ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநில தலைமைச் செயலாளார் மற்றும் டி.ஜி.பியிடம் பேசிய வைரங்கேடே எஸ்.டி.பி.ஒ., தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட பெயர்களை வைரங்க்டே காவல் நிலையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஜூலை 26 சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக மிசோரம் அதிகாரிகளை தோலாய் காவல் நிலையத்திற்கு வரக் கூறி அசாம் சம்மன் அனுப்பியது. டிஎஸ்பி கல்யாண் தாஸ், கோலாசிப் துணை கமிஷனர் எச் லால்தாங்க்லியானா, எஸ்பி வான்லல்பகா ரால்டே, கூடுதல் எஸ்பி டேவிட் ஜேபி, வைரெங்டே எஸ்டிஓ (சிவில்) சி லால்ரெம்பூயா, வைரெங்டே எஸ்டிபிஓ தார்டியா ஹ்ராங்சல் மற்றும் இந்தியா ரிசர்வ் பட்டாலியன் கூடுதல் எஸ்பி புரூஸ் கிப்பி ஆகியோருக்கு ஒரே மாதிரியான நோட்டீஸ்களை வழங்கினார்.

153A/ 447/336/379/333/ 3O7/ 3O2/ 427/147/ 148/149/120 (B)/ பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் தொடர்பாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தோளை காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி நோட்டீஸ் கேட்டுக் கொண்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 34 பிரிவுகள் 25 (1-A)/27 ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோலாசிப்பின் எஸ்.பி. ரால்தே, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, நான் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நோட்டீஸையும் பெறவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதிகாரப்பூர்வமாக நான் அப்படி ஒரு நோட்டீஸை பெற்றாலும் அசாமிற்கு செல்ல மாட்டேன். அசாம் நாடகம் நடத்துகிறது. நான் ஏன் அங்கே செல்ல வேண்டும். அங்கே செல்வதில் ஒரு பயனும் இல்லை.

இவர்கள் அன்று கோலாசிப் மாவட்டம் மற்றும் அங்குள்ள படைகளின் பொறுப்பில் இருந்த அதிகாரிகள். அவர்கள் ஏன் எங்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்கள் என்பதை விளக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர்கள் எங்கள் சாட்சிகளாக ஆகி, யார் செய்தார்கள் என்று எங்களிடம் சொல்ல வேண்டும் என்று அசாம் காவல்துறை அதிகாரி மற்றொரு புறம் தெரிவித்தார்.

மிசோரமின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. வான்லவேனாவை தேடி அசாம் காவல்படை டெல்லிக்கு விரைந்தது. மிசோரம் அரசு வீட்டிற்கு சென்ற குழுவால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சம்மனை ஏற்க மறுத்த ரெசிடென்ட் கமிஷனர் மூலம் சம்மனை வழங்க முயன்றது.

அதன்பிறகு, எம்.பி.யின் வீட்டுக்கு வெளியே அறிவிப்பு ஒட்டப்பட்டது. "சம்மன் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இப்போது வான்லவேனா விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் அல்லது கைது வாரண்ட் வழங்கும் வகையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ”என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

நீங்கள் சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து ஊடகங்களில் மிரட்டும் தொணியில் அறிக்கை வெளியிட்டிருப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம். எனவே, உங்களிடமிருந்து உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிய உங்களை கேள்வி கேட்க நியாயமான காரணங்கள் உள்ளன என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு தவறாமல் தோளை காவல் நிலையத்தின் OC முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

இதற்கிடையில், செய்தி நிறுவனமான பிடிஐ, முதல்வர் சர்மாவை மேற்கோள் காட்டி, அசாம் மக்கள் அனைத்து ஆயுதங்களும் கைப்பற்றப்படும் வரை மிசோரம் செல்லக்கூடாது என்று கூறியதை மேற்கோள்காட்டியுள்ளது.

"நிலைமை சீராகும் வரை மிசோரம் செல்ல வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொண்டோம். முதலில் நிலைமையை ஆய்வு செய்வோம். அமைதி நிலவும் போது மிசோரம் செல்லலாம், ”என்று சிராங்கில் நடந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் போது நிரூபர்களிடம் ஷர்மா கூறினார். ஏ.கே -47 மற்றும் துப்பாக்கி சுடும் துப்பாக்கிகள் பொதுமக்களுடன் இருக்கும்போது, மக்களை எப்படி அங்கு செல்ல அனுமதிக்க முடியும்? மிசோரம் அரசு இந்த ஆயுதங்களை தங்கள் பொதுமக்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும். இது குறித்து மக்கள் அச்சத்துடன் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜூலை 23 அன்று உருவாக்கப்பட்ட மிசோரம் எல்லைக் குழுவின் உறுப்பினர்கள், மாநிலத்தின் வடக்குப் பகுதி 1875 எல்லைக் கோட்டைப் பின்பற்றும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. "மிசோரம்-அஸ்ஸாம் எல்லை இந்த ஆவணத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்று குழு தனது நிலைப்பாட்டை தொடரும்" என்று மிசோரம் அரசாங்கத்தின் ஒரு அறிவிப்பு கூறுகிறது.

அஸ்ஸாம்-மிசோரம் எல்லை தொடர்பான சர்ச்சை இரண்டு வெவ்வேறு தேதிகளில் செய்யப்பட்ட எல்லை நிர்ணயம் செய்வதில் இருந்து வருகிறது. 1875ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட எல்லையை பயன்படுத்த வேண்டும் என்று மிசோரம் நம்புகிறது. ஆனால் அசாம் மாநிலம் 1933ம் ஆண்டு லூசாய் ஹில்ஸ் மற்றும் மணிப்பூருக்கு இடையே உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தை பின்பற்ற விளைகிறது.

எல்லைப் பிரச்சினைகளை படை மூலம் தீர்க்க முடியாது. பரஸ்பர உரையாடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mizoram Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment