அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து நேற்று மத்திய அரசிற்கு எதிராக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தார் மேற்கு வங்க முதல்வர்.
அசாம் குடிமக்கள் பதிவேடு வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்டது.
இது பற்றிய முழு செய்தியினையும் படிக்க
சமீபத்தில் இந்த பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவர்களில் சுமார் 40 லட்சம் பேரை நீக்கிவிட்டது மத்திய அரசு.
இது குறித்து நேற்று காரசாரமான கருத்தினை வெளியிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அசாம் குடிமக்கள் பதிவேடு பற்றிய மம்தாவின் கருத்து
100, 200, 300 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் மக்களை திடீரென வெளியேறச் சொன்னால் எங்கு செல்வார்கள் என்றும், சொந்த நாட்டிலேயே தம் மக்களை அகதியாக்கியிருக்கிறது.
எப்படி ஒரு நாளில் இந்தியர்களை வெளிநாட்டினரென எண்ண வைத்திருக்கிறது இவ்வரசு என்று வருத்தம் தெரிவித்தார்.
கத்தோலிக்க திருச்சபை மாநாடு ஒன்றில் பேசிய மம்தா காட்டமாக தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இந்நிகழ்வினால் உள்நாட்டு போரினை உருவாக்க முயல்கிறது மத்திய அரசு என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவரின் உறவினர்கள் பெயர்களும் அசாம் குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியிருந்தார் மம்தா.
மம்தா மீது வழக்கு
அசாம் திப்புருகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஜக இளைஞர் அணித் தலைவர் மம்தா மீது புகார் பதிவு செய்திருக்கிறார்.
மேலும், அசாமினைப் பற்றியோ அசாம் குடிமக்கள் பதிவேடு பற்றியோ மம்தா கவலைப்பட வேண்டாம் என்றும், மேற்கு வங்கத்தைக் காட்டிலும் பெங்காலிகள் அசாமில் நலமுடன் இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மம்தாவின் கருத்திற்கு பாஜக தலைவர் அமித் ஷா அவர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள மம்தா சோனியா காந்தி, சரத் பவார் அவருடைய மகள் சுப்ரியா சுலே, ராம் ஜெத்மலானி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் ஷத்ருகன் சின்ஹா ஆகியோர்களை சந்திக்க இருக்கிறார்.