அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியீடு – 19 லட்சம் பேர் நீக்கம்

NRC list : வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

By: August 31, 2019, 1:14:51 PM

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3,30,27,661 பேர் இந்த பட்டியலில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், 3,11,21,004 மட்டுமே, இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 19 லட்சம் பேர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.

அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

இதன்படி, அசாமை சேர்ந்தவர்கள், தகுந்த சான்றிதழ்களை கொடுத்து, தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால், அசாமில், பதற்றமும், பரபரப்பும் நிலவியது.இதையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக, மறு பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா கூறுகையில், இறுதி பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள், பட்டியலில் உரிய ஆவணங்கள் வழங்கவில்லை. இந்த பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள், வெளிநாட்டினவருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றார். பட்டியல் வெளியீடு காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Assam nrc final list released 19 lakh left out

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X