முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அசாம் அமைச்சரவை நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு முடிவு செய்ததாக அறிவித்தது. மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முதல் படியாக இது உள்ளது. முன்னதாக உத்தரகாண்ட் அரசு நாட்டிலேயே முதன் மாநிலமாக
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது.
"காலனித்துவ சட்டம்" என்று அவர் அழைத்ததை நீக்குவது குறித்த அசாம் அமைச்சரவை முடிவை அறிவித்த அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, மாநிலத்தில் "பொது சிவில் சட்டத்தை நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான படியாகும்" என்றார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மக்கள் தொகையில் 34% முஸ்லிம்கள் உள்ளனர், மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லிம்கள் உள்ளனர்.
நள்ளிரவில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, X தளப் பக்கத்தில் கூறுகையில், “23.22024 அன்று, பழமையான அசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை முடிவு எடுத்தது. சட்டப்படி மணமகனும், மணமகளும் சட்டப்பூர்வ வயது 18 மற்றும் 21- ஐ எட்டவில்லை என்றாலும் கூட திருமணப் பதிவு அனுமதிக்கும் விதிகள் இந்தச் சட்டத்தில் உள்ளன. இந்த நடவடிக்கை அசாமில் குழந்தை திருமணங்களை தடை செய்வதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது என்று கூறினார்.
பரூஹ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 - அதன் அடிப்படையில் 94 முஸ்லிம் பதிவாளர்கள் மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவுசெய்து விவாகரத்து செய்து வருகின்றனர். இந்த நடைமுறைய ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவை (கூட்டம்) இந்தச் சட்டத்தை நீக்கியதன் விளைவாக, இன்றைக்குப் பிறகு, இந்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம் திருமணப் பதிவு அல்லது விவாகரத்துப் பதிவு செய்ய முடியாது. எங்களிடம் சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது, எனவே அனைத்து திருமணங்களும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
இச்சட்டம் மாநில அரசுக்கு, முஸ்லீமாக இருந்தும், முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை பதிவு செய்ய உரிமம் வழங்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது, "அத்தகைய பதிவுக்கு விண்ணப்பித்தவுடன், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் அவை செயல்படுத்தப்படுகின்றன". அத்தகைய பதிவாளர்களின் நோக்கம் மற்றும் பொறுப்புகளையும் அது வகுத்தது.
இது ஒரு "காலனித்துவ சட்டம்" மற்றும் "இன்றைய சமூகத்துடன் ஒத்துப்போகவில்லை" என்று அழைத்த பருவா, குழந்தை திருமணத்திற்கு எதிரான மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை, இதன் ஒரு பகுதியாக 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
On 23.22024, the Assam cabinet made a significant decision to repeal the age-old Assam Muslim Marriages & Divorces Registration Act. This act contained provisions allowing marriage registration even if the bride and groom had not reached the legal ages of 18 and 21, as required…
— Himanta Biswa Sarma (@himantabiswa) February 23, 2024
“இந்த (ரத்து செய்யப்பட்ட சட்டம்) மூலம், 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அல்லது 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் வயதுக்குட்பட்ட திருமணங்கள் பதிவு செய்யப்படுவதையும் நாங்கள் பார்க்கலாம். எனவே குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க இது ஒரு பெரிய நடைமுறையாகும்,'' என்றார்.
பதிவாளரிடம் திருமண விண்ணப்பங்களை யார் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடும் சட்டத்தின் ஒரு ஷரத்து, "... மணமகனும், மணமகளும், அல்லது இருவரும் மைனர்களாக இருந்தால், அவர்கள் சார்பாக அந்தந்த சட்டப்பூர்வ பாதுகாவலர்களால் விண்ணப்பம் செய்யப்படும்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படும் 94 பதிவாளர்களை அந்தந்த மாவட்ட ஆணையர்கள் காவலில் எடுத்துக் கொள்வார்கள் என்றும், அவர்களுக்கு ஒரு முறை இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் நிதி இழப்பீடு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் பருவா கூறினார்.
அசாம் அரசாங்கம் யு.சி.சியை அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக முதல்வர் சர்மா பலமுறை கூறியுள்ளார். அதே நேரத்தில், பலதார மணத்தை கிரிமினல் குற்றமாக ஆக்குவதைத் தடைசெய்யும் மசோதாவையும் உருவாக்கி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/assam-repeals-muslim-marriage-act-key-step-in-journey-towards-ucc-9177831/
மாநில அரசு பலதார மணத்திற்கு எதிரான மசோதாவின் இறுதி படியில் இருந்ததால், நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அதை அறிமுகப்படுத்த இருந்தது. எவ்வாறாயினும், கடந்த வாரம், சர்மா மாநில அமைச்சரவையுடன் அதை ஒரு UCC உடன் "சீரமைக்க" எதிர்பார்த்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்று பரிந்துரைத்தார்.
மாநிலத்தின் பழங்குடி சமூகங்கள் யு.சி.சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் சர்மா முன்பு கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.