/tamil-ie/media/media_files/uploads/2018/12/Assam-Train-Blast-2.jpg)
Assam Train Blast, அசாம்
அசாம் மாநிலத்தின் உடல்குரி மாவட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு இன்டர்சிட்டி ரயிலில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக வடகிழக்கு ரயில்வே துறை அறிவிப்பு
அசாமின் கமக்கியா - டெகர்கோன் பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி ரயில், ஹரிசிங்கா ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு ரயில் பெட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டது.
அசாம் ரயில் விபத்து
மாலை 7 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாகவும், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இது குண்டு வெடிப்பா அல்லது, மின்சார ஷார்ட் சர்கியூட்டால் ஏற்பட்ட விபத்தா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை" என வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும். மூன்று பேரில், நபஜித் தாஸ் மற்றும் கிரோதா போரா என்று இருவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.