News about Angkita Dutta, Assam Youth Congress chief on BV Srinivas Tamil News: அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் அசாம் தலைவர் அங்கீதா தத்தா, அமைப்பின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி வி துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) அவரை "கட்சி விரோத நடவடிக்கைகள்" காரணமாக 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இளைஞர் காங்கிரஸின் தலைவரான டாக்டர் அங்கீதா தத்தா, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக, கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் டாக்டர் அங்கீதா தத்தாவை நீக்கியுள்ளார்." என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hon'ble Congress President has expelled Dr. Angkita Dutta, President Assam Pradesh Youth Congress, from the primary membership of the party, for six years, for her anti-party activities, with immediate effect. pic.twitter.com/jEofAiRlja
— INC Sandesh (@INCSandesh) April 22, 2023
அங்கீதா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் அமைப்பு தலைவர் ஸ்ரீனிவாஸை "பாலியல்வாதி" மற்றும் "பேரினவாதி" என்று குறிப்பிட்டு, அவர் ட்வீட் செய்திருந்தார். "நான் ஒரு பெண் தலைவர். நான் இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளானால், மற்ற பெண்களை நான் எவ்வாறு சேர ஊக்குவிப்பேன்."
அவரது தொடர்ச்சியான ட்வீட்களில், ஸ்ரீனிவாஸ் தன்னை "தொடர்ந்து" துன்புறுத்துவதாகவும், ஆறு மாதங்களாக பாலின அடிப்படையில் தனக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்தும் ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
“எனது புகார்கள் இருந்தபோதிலும், ஸ்ரீனிவாஸுக்கு எதிராக எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நான் பல மாதங்களாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஸ்ரீனிவாஸ் தனது பிஆர் என்ற போர்வையில் அனைத்து வகையான தவறுகளிலிருந்தும் தப்பித்து வருகிறார்." என்றும் அவர் கூறியிருந்தார்.
How can a sexist and chauvinistic lead @IYC torture and demean a woman every single time. What happened to @priyankagandhi ladki hoon ladk Shakti hoon https://t.co/opLpmcLLbh
— Dr Angkita Dutta (@angkitadutta) April 18, 2023
இதற்கு பதிலளித்த பி.வி.ஸ்ரீனிவாஸ், பொது மன்னிப்பு கேட்காத நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அங்கீதா தத்தா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பதவி வகித்த அசாம் முன்னாள் அமைச்சர் அஞ்சன் தத்தாவின் மகள் ஆவார். மேலும், அவர் அம்குரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.