அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அங்கிதா தத்தா, இளைஞர் அணியின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ஒரு ஆணாத்திக்க வாதி என்றும் பெண் என்பதால் தன்னை சிறுமைப்படுத்தி அவர் பேசியதாக புகார் அளித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவர் அங்கிதா தத்தா. இவர் பதிவு செய்த ட்வீட் அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் இளைஞர் அணியின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி மற்றும் செயலாளர் வரதன் யாதாவ் என்னை கடந்த 6 மாதங்களாக மோசமான வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் பெண் என்பதால், என்னை தரம் தாழ்த்தி பேசுகின்றனர்” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் செய்த ட்வீட்ல் “ நான் ஒரு பெண் தலைவர். எனக்கே வன்கொடுமை நடைபெற்றால், மற்ற பெண்களை கட்சியில் இணையுங்கள் என்று என்னால் எப்படி கூற முடியும்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் போது, அவரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும், ஆனால் இதுவரை எந்த நவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் அன்ஜன் தத்தா என்பவரின் மகள்தான் அங்கிதா. காங்கிரஸ் கட்சி சார்பாக ஆம்குரி தொகுதியிலிருந்து தேர்தலை இவர் சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் இளைஞர் அணியின் சட்டப்பிரிவின் தலைவர் ருபேஷ் எஸ் பதாயுரியா , அங்கிதா தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதில் இவரது குற்றச்சாட்டுக்கு பின்பு அரசியல் தூண்டுதல் இருப்பதாவும், எல்லாம் பொய்யானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “ சார்தா சிட் பண்ட் ஊழலில் இவர் பெயர் உள்ளது என்றும் இதிலிருந்து தப்பிக்க மற்றும் இந்த வழக்குகளிருந்து தன்னைவிடுவித்துக் கொள்ள,அசாம் முதல்வருடன் சேர்த்து செயல்படுகிறார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.