ஒடிசாவின் ராஜ்பவனில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி ஒருவர், ஆளுநரின் மகன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். பூரி ரயில் நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் செல்ல சொகுசு காரை அனுப்பாததற்காக ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் தன்னை தாக்கியதாக அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பைகுந்த பிரதான் (47) என்ற அதிகாரி, கவர்னர் செயலகம், ராஜ்பவனில் சமையல் பிரிவு உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வருகைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த அவரை ஆளுநர் தாஸின் மகன் லலித் குமார் மற்றும் ஐந்து பேர் ஜூலை 7 ஆம் தேதி இரவு தன்னை அறைந்து, குத்தி, உதைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூலை 10-ம் தேதி, ஆளுநரின் முதன்மைச் செயலரிடம் பிரதான் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார் .
ராஜ்பவன் அதிகாரிகளும், முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ராவும் புகார் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
முதன்மைச் செயலாளரிடம் பிரதான் அளித்த புகாரில், “பூரி ராஜ்பவனின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நான், ஜூலை 7,8-ம் தேதிகளில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை/ அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட ஜூலை 5 முதல் அங்கு இருந்தேன் என்றார். பிரதான் புவனேஸ்வரில் உள்ள ராஜ்பவனில் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆவார். ஆனால் ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க பூரி வந்துள்ளார்.
ஜூலை 7 ஆம் தேதி இரவு 11.45 மணியளவில், அவர் அலுவலக அறையில் அமர்ந்திருந்தபோது, ஆளுநரின் தனிப்பட்ட சமையல்காரர் என்னிடம் வந்து, குமார் உங்களை உடனே பார்க்க வேண்டும் என்று அழைத்தாக கூறினார்.
“குமார் என்னைப் பார்த்த உடனேயே, கடுமையாக திட்டினார். தவறாக பேசினார். நான் இதை எதிர்த்து பேசிய போது அவர் என்னை அறைந்தார். நான் உடனே ஓடி ஒளிந்தேன். ஆனால் குமாரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி என்னைப் பிடித்து மீண்டும் அறைக்கு இழுத்துச் சென்றார்.
அங்கிருந்த பாதுகாவலர்கள், மற்றவர்கள் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தனர். குமார் மற்றும் அவர்கள் மீண்டும் என்னை அறைந்தனர், என் முகத்தில் குத்தினர். என் இடது கணுக்காலை முறுக்கினர். என்னை அவர்கள் கொன்று விட்டால், யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது என்று குமார் கூறி மிரட்டினார்” என்று அவர் புகாரில் கூறியுள்ளார்.
ஜூலை 8 ஆம் தேதி மாலை 04.30 மணியளவில் ஆளுநரின் முதன்மைச் செயலரிடம் நடந்த சம்பவத்தை வாய்மொழியாக விவரித்ததாகவும், ஜூலை 10 ஆம் தேதி புகாரை இ-மெயில் செய்ததாகவும் பிரதான் கூறினார்.
வெள்ளிக்கிழமை புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதானின் மனைவி சயோஜ், நாங்கள் ஜூலை 11 அன்று சீ பீச் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றோம், ஆனார் எங்கள் புகார் ஏற்கப்படவில்லை. எனவே, நாங்கள் காவல்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பினோம்," என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Assaulted by Governor’s son for not sending luxury car to pick him up: Odisha Raj Bhavan staffer
பூரி ரயில் நிலையத்தில் இருந்து தன்னை அழைத்து செல்ல இரண்டு சொகுசு கார்களை அனுப்பாததற்காக பிரதான் மீது குமார் கோபமாக இருந்துள்ளார். இதனால் அவர் பிரதானை தாக்கியுள்ளார். அப்போது குமார் தனது ஷூவை நக்கச் சொன்னதாகவும் அதிகாரி புகாரில் கூறியுள்ளார்.
சயோஜ் மேலும் கூறுகையில், "எனது கணவர் குடியரசுத் தலைவரின் பணிக்காக அனுப்பப்பட்டார், ஆளுநரின் மகனுக்கு சேவை செய்ய அல்ல" என்றார். காயமடைந்த பிரதான் வியாழக்கிழமை அன்று பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகளை பிரதான் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் பிரதான் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் அவர் கூறினார். 2019 ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஓ பணியில் சேர்வதற்கு முன்பு பிரதான் இந்திய விமானப்படையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்று சயோஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.