5 மாநிலங்களில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் 27 தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை பல கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வஙகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர்,காங்கிரஸ் பிஜேபி கூட்டணியும், அசாமில் பிஜேபியும், தமிழகத்தில் திமுக கூட்டணியம் ஆட்சியை கைப்பற்றியது.
இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இதில் குறிப்பாக வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் தமிழகம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் தேர்தலில் தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த குழுவில், தலைவராக அசோக் சவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை குழுவில் மூத்த தலைவரான மணிஷ் திவாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இக்ககுழுவை அமைத்தத காங்கிரஸ் தலைமை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil