telangana | madhya-pradesh | தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையவுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் கருத்துக்கணிப்பு கணிப்புகளின் பக்கம் திரும்பி உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் தொடங்கியது.
இங்கு, நவம்பர் 30ஆம் தேதி கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இது, 2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி தேர்தல் ஆகும். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் எனக் கூறுகின்றன.
அதேநேரத்தில், மத்திய பிரதேசத்திலும் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க முயன்றுவருகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை அகற்ற காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
இதற்கிடையில், மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, போட்டியாளர்களான காங்கிரஸையும், சோரம் மக்கள் இயக்கத்தையும் தோற்கடிக்க விரும்புகிறது.
கருத்துக் கணிப்புகள் என்றால் என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது தேர்தல் முடிவுகளை அளவிடுவதற்கு ஏஜென்சிகளால் நடத்தப்படும் வாக்காளர்களின் கணக்கெடுப்பு ஆகும். அவை எப்போதும் துல்லியமாக இல்லாவிட்டாலும், தேர்தலைப் பற்றிய நியாயமான குறிப்பைக் கொடுக்கின்றன.
எக்சிட் போல்கள் எப்போது அறிவிக்கப்படும்?
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் நவம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு அறிவிக்கப்படும்.
நவம்பர் 7 ஆம் தேதி காலை 7 மணி முதல் நவம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை "அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் வெளியிடுவது அல்லது விளம்பரப்படுத்துவது அல்லது வேறு எந்த வகையிலும் பரப்புவது" என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Assembly Elections 2023 Exit Polls: When will it be announced
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“