Advertisment

வெறும் 13% மட்டுமே... இணையத்தில் சொத்து விபரத்தை பதிவேற்றிய ஐகோர்ட் நீதிபதிகள்!

நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள 749 நீதிபதிகளில், 98 நீதிபதிகள் மட்டுமே தங்களது சொத்துக்களை அந்ததந்த உயர் நீதிமன்றங்களின் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Assets of 13 of High Court judges in public domain 80 of those from just 3 HC Official data Tamil News

கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களைத் தவிர, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் மெட்ராஸ் ஆகிய உயர் நீதிமன்றங்களில் இருந்து சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளும் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள 749 நீதிபதிகளில், 98 நீதிபதிகள் மட்டுமே தங்களது சொத்துக்களை அந்ததந்த  உயர் நீதிமன்றங்களின் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதாவது வெறும் 13 சதவீதம் நீதிபதிகள் மட்டுமே தங்களது சொத்து விபரங்களை அனைவரும் அறியும் வகையில் பொதுத்தளத்தில் வெளியிட்டு இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த அதிகாரப்பூர்வ தரவு கூறுகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Assets of 13% of High Court judges in public domain, 80% of those from just 3 HCs: Official data

இந்த 98 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் டெல்லி  உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். கேரளா உயர்நீதிமன்றம் அதன் இணையதளத்தில் உள்ள 39 நீதிபதிகளில் 37 பேரின் விவரங்களுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 55 நீதிபதிகளில் 31 பேரின் தகவல்களை பதிவேற்றியுள்ளது. மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் 39 நீதிபதிகளில் 11 பேரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. (கீழே விளக்கப்படம் பார்க்கவும்)

இந்த விபரங்கள் நீதிபதிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் அந்தந்த வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்தவர்களின் சொத்துக்கள் மற்றும் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள், நிலையான வைப்புத்தொகைகள், பத்திரங்கள் மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் போன்ற சொத்துரிமை மற்றும் முதலீட்டு விவரங்கள் மற்றும் வங்கிக் கடன்கள் போன்ற பொறுப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. சில விபரங்களில் நகைகளின் உரிமையும் அடங்கும்.

கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களைத் தவிர, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் மெட்ராஸ் ஆகிய உயர் நீதிமன்றங்களில் இருந்து சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளும் உள்ளனர். இந்த ஏழு உயர் நீதிமன்றங்களின் இணையதளங்கள், தங்கள் சொத்துக்களை அறிவிக்காத நீதிபதிகளின் பெயரைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் இந்த வகைக்கான கோப்பு பதிவேற்றப்படவில்லை. 

உச்ச நீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 33 நீதிபதிகளில் 27 பேரின் பட்டியலை வெளியிட்டது என்றும், அவர்கள் இந்திய தலைமை நீதிபதியிடம் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் பெயர்கள் மட்டுமே வழங்கப்பட்டன, அவர்களின் விபரங்கள் இல்லை என்றும் செப்டம்பர் 18 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அப்போது பேசிய உச்ச நீதிமன்ற அதிகாரி, "பொதுத்தளத்தில் வெளிப்படுத்தல் முற்றிலும் தன்னார்வ அடிப்படையில்" என்று கூறினார். அதே நாளில், இந்தியன் எக்ஸ்பிரஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை அந்தந்த இணையதளங்களில் ஆய்வு செய்தது.

ஆகஸ்டு 7, 2023 அன்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கட்டாயமாக வெளியிடுவதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் சட்டம் மற்றும் நீதிக்கான குழு பரிந்துரைத்துள்ளது. 

இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய, நீதிபதிகளின் சொத்துகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத 18 உயர் நீதிமன்றங்களில் எட்டு உயர் நீதிமன்றங்களுக்கு ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 28, 2023 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விகளை அனுப்பியது. இந்த தகவலை இதுவரை பொதுத் தளத்தில் வெளியிடாததற்கான காரணங்களை அறிய ஆர்.டி.ஐ கேள்விகள் முயன்றன. அது எப்போது கிடைக்கும்? நீதிபதிகளின் ஆட்சேபனைகளின் விவரங்கள், ஏதேனும் இருந்தால், உச்ச நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்துக்கும் இடையேயான கடிதப் பிரதிகள் ஏதேனும் இருந்தால், மற்றும் தங்கள் சொத்துக்களை அறிவிக்காத நீதிபதிகளின் பட்டியல் ஆகியவற்றை கேள்விகளாக தொகுத்துக் கேட்கப்பட்டது.  

செப்டம்பர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில் பெறப்பட்ட பதில்கள், “தனிப்பட்டவை” என முத்திரை குத்தப்பட்ட தகவல் முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆர்.டி.ஐ கீழ் உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடுவது வரை:

* இந்த அறிவிப்புகளை பொதுத் தளத்தில் வைப்பது குறித்து கேட்டதற்கு, தற்போது 84 நீதிபதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய அலகாபாத் உயர்நீதிமன்றமும், மும்பை உயர்நீதிமன்றமும் ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் "தகவல்" என்ற வரையறையின் கீழ் வரவில்லை என்று கூறியது.

* உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் மார்ச் 6, 2012 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை வழங்கியது, அதில் “நீதிபதிகள் சொத்துக்களை வெளியிடுவதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர கடுமையாக ஆட்சேபிக்கிறோம். நீதிமன்ற இணையதளத்தில் நீதிபதிகள் மூலம், சொத்துக்களை வெளியிட நீதிமன்றம் தயங்கவில்லை." என்று கூறியது. 

* ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், “அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடுவதற்கான வழிகாட்டுதல்கள்/விதிமுறைகள் இல்லாத நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் அனைத்து மாண்புமிகு நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடுவதற்கான எதிர்பார்ப்புகளை உருவாக்க முடியாது.” என்று கூறியது. 


* குஜராத் உயர் நீதிமன்றம், “தனிப்பட்ட தகவல்களை” வெளியிடுவதற்கு “எந்த பெரிய பொது நலனையும் காணவில்லை” என்று கூறியது.

* ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், “சொத்துகள் பற்றிய அறிவிப்பு ரகசியமானது என்பதால், அந்தத் தகவலை அளிக்க முடியாது” என்று பதிலளித்தது.

* தெலுங்கானா உயர்நீதிமன்றம், "தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வைக்கப்படாது, ஏனெனில் அவை உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படியும், முழு நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படியும் ரகசியமாக கருதப்படும்." என்று கூறியது.

* கவுகாத்தி உயர் நீதிமன்றம், "மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாண்புமிகு நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்பை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை" என்று கூறியது.

* சிக்கிம் உயர் நீதிமன்றம், "நீங்கள் கேட்ட தகவல் அவர்களின் பிரிவுகளின் பதிவுகளில் இல்லை அல்லது இந்த உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை." என்று  பதிலளித்தது. 

மே 7, 1997 அன்று, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அதாவது, "ஒவ்வொரு நீதிபதியும், ரியல் எஸ்டேட் அல்லது முதலீடு வடிவில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும், தங்கள் மனைவி அல்லது அவர்களைச் சார்ந்திருக்கும் வேறு நபர்களின் பெயரில் உள்ள அனைத்தையும், தலைமை நீதிபதிக்கு அறிவிக்க வேண்டும்." என்று தீர்மானம் போடப்பட்டது. 

ஆகஸ்ட் 28, 2009 அன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால், "அனைத்து நீதிபதிகளும் தங்கள் சொத்துக்களை வெளிப்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

செப்டம்பர் 8, 2009 அன்று, உச்ச நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் அக்டோபர் 31, 2009 அன்று அல்லது அதற்கு முன் நீதிபதிகளின் சொத்துக்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்க தீர்மானித்தது.

பல ஆர்.டி.ஐ கேள்விகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அதன் நீதிபதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விவரங்களை நவம்பர் 2009 இல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. சில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அந்தந்த அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் அவற்றைப் பின்பற்றினர். உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட விவரங்கள் மார்ச் 31, 2018-க்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வரை 55 முன்னாள் நீதிபதிகளின் விபரங்கள் மட்டுமே உள்ளன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court High Court Madras High Court Supreme Court Delhi High Court Jodhpur Court kerala High court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment