அஸ்ட்ரா ஏவுகணை வெற்றிகர சோதனை : ராஜ்நாத் சிங் பாராட்டு
Astra missile successfully tested : அஸ்ட்ரா ஏவுகணை, தாக்குதல் இலக்கை மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வானில் இருந்தே 70 கி.மீ., சென்று வானில் உள்ள ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ கூறியுள்ளது. ஒடிசா மாநில கடலோர பகுதியில், சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக, சுகோய் 30 எம்கேஐ ஜெட் விமானத்தில் இருந்து அஸ்ட்ரா ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, தாக்குதல் இலக்கை மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணையில் உள்ள ரேடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராகிங் சிஸ்டம் மற்றும் சென்சார்கள், இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
ராஜ்நாத் சிங் பாராட்டு : அஸ்ட்ரா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்த விமானப்படையினருக்கும், டிஆர்டிஓ குழுவிவருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.