Tabassum Barnagarwala
At 18%, Telangana records highest positivity rate among health staff : தெலுங்கானா மாநிலத்தில் 18% முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் முன்கள பணியாளர்கள் இங்கு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 16% முன்கள பணியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் நிலை குறித்தும், நோய் தொற்று பரவல் விகிதம் குறித்தும் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த தொற்று மேலும் அவர்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 14%, கர்நாடகாவில் 13%, புதுவையில் 12% மற்றும் பஞ்சாப்பில் 11% என்று முன்கள பணியாளர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலமாக நாங்கள் பெற்றோம். மருத்துவமனைகளில் இருந்து ஏற்படும் நோய் தொற்று குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். சுகாதார பணியாளர்களுக்கு எவ்வாறு நோய்த்தொற்று உருவாகிறது என்று கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். மருத்துவமனை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா இல்லையா என்பது குறித்து சந்தேகம் எழுகிறது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பூஷன் ஒரு ‘நண்பர் அமைப்பு’க்கு (Buddy System) அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார், இதன் கீழ் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொற்றுநோயைக் குறைப்பதற்கான டோன்னிங் மற்றும் டாஃபிங் நடைமுறைகளை மேற்பார்வையிடுவார்கள். சுகாதார ஊழியர்கள் வரும் பகுதிகளை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கவும் அல்லது உள்ளூர் தொற்று கண்டறியப்பட்டால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றும் அவர் கூறினார்.
ஐ.எம்.ஏ மகாராஷ்ட்ராவின் பிரசிடெண்ட் மருத்துவர் அவினாஷ் போண்ட்வி பேசுகையில் “அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. பொதுமருத்துவர்கள் பலருக்கும் முறையான பி.பி.இ. கிட்கள் கிடைக்கவில்லை. மேலும் அவற்றின் விலையை அரசு நிலையாக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில், ஆகஸ்ட் 29 வரை, ஐ.எம்.ஏவில் 4,274 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு 408 பேர் இறந்துவிட்டனர். மருத்துவ பயிற்சியாளர்களிடையே இறப்பு விகிதம் சாதாரண மக்களை விட 9.5 சதவீதம் அதிகமாக உள்ளது. எத்தனை சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்ட அரசாங்க தரவு எதுவும் இல்லை, ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் அதிகபட்சமாக (24.7 சதவீதம்) மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்த்து 60% சுகாதார பணியாளர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.