கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 5 நாள்களே உள்ள நிலையில், அங்கு பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 5) பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை மேற்கோள் காட்டினார்.
அப்போது, பயங்கரவாதிகளுக்கு சில கட்சிகள் அடைக்கலம் அளிப்பதாக குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒரு பயங்கரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது.
இது பயங்கரவாதத்தின் அசிங்கமான உண்மையைக் காட்டுகிறது. பயங்கரவாதிகளின் வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது. இந்தப் படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது.
பயங்கரவாதப் போக்கோடு நிற்கிறது. அதாவது, வாக்குகளுக்காக பயங்கரவாதத்தை பாதுகாக்கிறது” என்றார். தொடர்ந்து, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, “தடை விதித்தல் மற்றும் மலிந்து போதல்” எனக் கூறிய பிரதமர் மோடி, பாஜக கர்நாடகாவை வளர்ச்சியில் முதல் மாநிலமாக கொண்டுவர பாடுபடுகிறது” என்றார்.
இதற்கிடையில் நீட் தேர்வு நாளில் உள்ள பா.ஜ.க. பேரணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துமகூரு பொதுக்கூட்டத்தில் மே 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“