கோவா காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திகாம்பர் காமத், தன்னுடன் 7 எம்.எல்.ஏ.க்களையும் கூட்டிக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னதாக மைக்கேல் லோபோ என்பவரை கட்சியில் இருந்து நீக்கி இந்தக் கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் பலவித நடவடிக்கைகளை எடுத்தது. காமத் மற்றும் லோபோ ஆகியோரை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் கடிதம் அளித்தது.
கோவாவின் சுற்றுலா தொகுதி எனப் பெயர்பெற்ற கலாங்குட்டோ என்ற தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ., ஆக தேர்வானவர் மைக்கேல் லோபோ. 46 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.
இவர் கோவா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தார்.
இவர் தனது பரப்புரையின்போது சரியான நேரத்தில் நான் எங்கே இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பார். அறிவியல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த இவர் பாஜகவில் இருந்து விலகி பிப்ரவரி கோவா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், மீண்டும் கலாங்குட்டோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது புதிய சட்டப்பேரவை தொடங்கி மாதங்கள் பல ஆகிவிட்டன. ஆனால் லோபோவின், “சரியான நேரத்தில் நான் எங்கே இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்ற வாசகம் மட்டும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.
லோபோவும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவி விட்டார். ஆக மாநிலத்தில் காங்கிரஸின் பலம் 3 ஆக சுருங்கி உள்ளது. கடந்த காலங்களில் லோபோ பாரதிய ஜனதா கட்சியில் வலிமையான தலைவராக இருந்தார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் உள்ளூர் மக்களிடத்தில் சக்தி வாய்ந்தவராகவே காணப்பட்டார். இந்நிலையில் இந்தாண்டு பாஜக உறவை முறித்துக் கொண்டு அவர் காங்கிரஸில் இணைந்த போது காங்கிரஸ் அவரை வலிமையான தலைவராகவே பார்த்தது.
லோபோ தனது மனதுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். இதனால், பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதிலும் முதலமைச்சருடன் முரண்பட்டார். அடிக்கடி அறிக்கை யுத்தம் நடத்திவந்தார்.
லோபோ காங்கிரஸ் கட்சிக்கு சென்ற போது அவருக்கு அங்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. தனது மனைவி உள்பட 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்கு காரணமாக அவர் இருந்தார்.
இருப்பினும் லோபோ ஹோட்டல் தொழில்களில் கவனம் செலுத்திவருபவர். இவர்மீது சில புகார்களும் உள்ளன. கடந்த காலங்களில் இதைத் தான் காங்கிரஸும் விமர்சனம் ஆக வைத்தது.
லோபோவுக்கு பாஜகவில் தொடர மனமில்லை. ஆனால் தனது சொந்த தொழிலை மனதில் வைத்து அவர் பாஜகவில் இருக்கிறார் என கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்வும் தெரிவித்திருந்தார்.
முந்தைய பாஜக ஆட்சியின் போது, லோபோவுக்கும் அப்போதைய நகர மற்றும் கிராமத் திட்டமிடல் (TCP) அமைச்சர் விஸ்வஜித் ரானேவுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்தது.
லோபோஸுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு உணவு மற்றும் மருந்து ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் லோபோ செய்த ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று இதர தலைவர்களும் கூறிவந்தனர்.
ஜனவரியில் காங்கிரஸில் இணைந்தபோது, லோபோ, “நாங்கள் கோவாவின் நலனுக்காக இணைந்துள்ளோம். கோவா மக்களின் முன்னோக்கி அழைத்துச் செல்லும் வழி காங்கிரஸ் கட்சி மட்டுமே.
நான் துணை சபாநாயகராக இருந்தபோது மிகவும் வலுவான நிலைப்பாட்டை எடுத்திருந்தேன்” என்றார்.
இந்த நிலையில் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் லோபோ, காங்கிரஸில் இருந்து வெளியேறு, பாஜவை பலப்படுத்து என்று கூறினார். தற்போது பாஜகவுக்கு மீண்டும் திரும்பிவிட்டார்.
இதனால் மாநிலத்தில் காங்கிரஸிற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.