கர்நாடக மாநிலம் தலவார்காட் பகுதியில் உள்ள ஆனேகுந்தி என்ற இடத்தில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹனுமன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் விஜயநகர பேரரசினால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோவில் அமர்ந்திருந்த 30 வயதான இளைஞர் ஹனுமேஷ், இப்பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகு அன்சாரி, ஹனுமன் பரப்புரையை தொடங்கியதில் இருந்து இங்கு நிலைமை மாறியுள்ளது. பாஜகவுக்கு வாய்ப்புள்ளது என்றார்.
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தீவிர வலதுசாரி அரசியல் அமைப்பான பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை தடை செய்ய போவதாக தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா இதனை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனேகுந்தி கிராமத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜயநகரா என்ற நகரில் நடந்த பரப்புரையின்போதுதான், பஜ்ரங் தளம் போன்ற வலதுசாரி இயக்கங்களை தடை செய்ய போவதாக தெரிவித்துள்ளது.
இது ஹனுமனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் அவர், “அன்று ராமனை பூட்டி வைத்தார். இன்று ஹனுமனுக்கு தடை விதிக்க நினைக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து, ஜெய் பஜ்ரங் பலி என்ற ஹனுமன் கோஷத்தையும் அவர் முன்னெடுத்தார். எனினும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, பாரதிய ஜனதா அதிருப்தியாளர் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கொப்பல் மற்றும் விஜயநகர மாவட்டங்களில் 350 க்கும் மேற்பட்ட அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் இவை இந்து கலாச்சாரத்தை ஆதரித்த விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன.
தற்போது, போது, கல்யாண கர்நாடகாவில் வரும் இந்தப் பகுதி, மனித வளர்ச்சிக் குறியீடுகளின் அடிப்படையில் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகும்.
மேலும் இங்கு ஒவ்வொரு சாதிக்கும் பாத்தியப்பட்ட பல்வேறு ஹனுமன் கோவில்கள் உள்ளன. எனினும், ஹனுமானஹள்ளி கிராமத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அமைந்துள்ள ஹனுமன் கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.
இங்குள்ள மலையில் ஹனுமன் பிறந்தார் என்ற பரப்புரையை உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து பாரதிய ஜனதாவும் பரப்பிவருகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இங்கு மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இங்கு தரிசனம் செய்தார். மேலும், அஞ்சனாத்ரி மலை மற்றும் ஆனேகுண்டி இடிபாடுகள் கங்காவதி தொகுதியில் வருகின்றன.
இங்கு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அன்சாரி, தற்போதைய பாஜக எம்.எல்.ஏ. பரண்ணா முனவல்லி, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜனார்த்தன் ரெட்டி கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷ என்ற தனது சொந்தக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
கர்நாடகத்தில் உள்ள இந்தப் பகுதியில்தான் ஹனுமன் பிறந்தார் என்பதைபோல் மகாராஷ்டிரா, ஆந்திரா. கோவாவிலும் நம்பிக்கை உள்ளன.
இதற்கிடையில் பஜ்ரங் தளம் மீதான விமர்சனம் காங்கிரஸிற்கு சாதகமாக இருக்கும். அவர்களுக்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்க வழி செய்யலாம். இதனால் பா.ஜ.க.வுக்கு எந்த நம்மையும் இல்லை என அக்கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“