scorecardresearch

பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணிவகுப்பு.. தொண்டர்களுக்கு வலுவான சேதி சொன்ன மல்லிகார்ஜுன் கார்கே!

பாரத் ஜோடோ யாத்ரா தொடர் பிரச்சாரத்தை பிப்ரவரியில் ராய்ப்பூரில் நடத்துவது என வழிகாட்டுதல் குழு முடிவு செய்துள்ளது.

பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணிவகுப்பு.. தொண்டர்களுக்கு வலுவான சேதி சொன்ன மல்லிகார்ஜுன் கார்கே!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடந்த முதல் கூட்டம்

காங்கிரஸ் வழிநடத்தல் குழுவின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கி, கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஞாயிற்றுக்கிழமை (டிச.4) அமைப்பின் நிர்வாகிகளுக்கு வலுவான செய்தியை வழங்கினார்.
மல்லிகார்ஜுன் கார்கே கடந்த அக்டோபரில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி அதன் முன்னோக்கி செல்லும் பாதையை பட்டியலிடுகையில், “மேலிருந்து கீழாக அமைப்பினரின் பொறுப்பு” முக்கியமானது என்பதை தெளிவுபடுத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாதவர்கள், புதிய சக ஊழியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், “காங்கிரஸ் அமைப்பு வலுவாகவும், பொறுப்புணர்வாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்றார்.

இதற்கிடையில், கார்கேவின் தேர்தலை திட்டங்களை உறுதிப்படுத்தவும், எதிர்கால நடவடிக்கையை வகுக்கவும், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகத்தை ஆலோசிக்கவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் பாதியில் ராய்பூரில் காங்கிரஸின் மூன்று நாள் முழுக் கூட்டத்தை நடத்தவும் வழிநடத்தல் குழு முடிவு செய்தது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவைத் தொடர்ந்து, AICC பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் முக்கியப் பங்கைக் கொண்டு, ஜனவரி 26 முதல் இரண்டு மாத பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவும் குழு முடிவு செய்தது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரியங்கா ஒவ்வொரு மாநிலத்திலும் “பெண்கள் அணிவகுப்புகளை” வழிநடத்துகிறார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு, கார்கே, கட்சியின் அரசியலமைப்பின்படி காங்கிரஸ் காரியக் கமிட்டியை வழிநடத்தல் குழுவாக மாற்றினார்.

கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள மாநிலங்களுக்கு மாதம் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்குமாறு கார்கே கேட்டுக் கொண்டார்.

அதில், நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளீர்களா, உள்ளூர் பிரச்சனைகளை புரிந்து கொண்டீர்களா. ஒவ்வொரு மாவட்ட மற்றும் தொகுதி காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா?
இந்த அமைப்பு மக்களின் பிரச்சினைகளை நில உண்மைக்கு ஏற்ப எடுத்து வைக்கிறதா? தொகுதி மற்றும் மாவட்ட அளவில் புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா. ஐந்தாண்டுகளில் எத்தனை அலகுகள், மாவட்ட மற்றும் தொகுதி கமிட்டிகள் மாற்றப்படவில்லை, தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன? எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

மேலும், அடுத்த 30 முதல் 90 நாட்களுக்குள் மக்கள் பிரச்சனைகள் குறித்த போராட்டங்கள் நடத்த பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சாலை வரைபடம் உள்ளதா என்பதையும் கார்கே அறிய விரும்பினார்.

அது குறித்து அவர், “இப்போது முதல் 2024 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் வரையிலான செயல்பாடுகளின் அட்டவணை என்ன?
செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இந்த மற்றும் பிற முக்கியப் பிரச்சினைகளுக்கு ஒரு வரைபடத்தைத் தயாரித்து அவற்றை செயல்படுத்தாவிட்டால் எங்கள் பொறுப்புகள் முழுமையடையாது, ”என்று அவர் கூறினார்.

மேலும், மூன்று மாதங்களுக்குள் இதுபோன்ற வழிகாட்டுதல்களை சமர்ப்பிக்குமாறு மாநிலப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கட்சியில் பொறுப்பானவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் என்றாலும், சிலர் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாமல் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கருதுகின்றனர். “இது சரியல்ல அல்லது ஏற்கத்தக்கது அல்ல,” என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் மற்றும் காங்கிரஸ் பெண்மணியும் ஒற்றுமை, நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் கூட்டு நோக்கத்துடன் செயல்பட வேண்டும்” என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஹாட் சே ஹாத் ஜோடோ” பிரச்சாரத்தை ஜனவரி 26 முதல் அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பூத்களை உள்ளடக்கிய தொகுதி அளவில் நடைபயணங்களுடன் கட்சி நடத்தும் என்றார்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராகுல் காந்தியின் கடிதம் மற்றும் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் விநியோகிக்கப்படும் என்றார். இளைஞர்களை இணைக்கும் வகையில் பைக் பேரணிகளையும் கட்சி நடத்தும் என்றார். முழுக் கூட்டத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “CWC தேர்தல் கட்சி அரசியலமைப்பின்படி நடக்கும்” என்று வேணுகோபால் கூறினார்.

காங்கிரஸின் அரசியலமைப்பின் படி, CWC கட்சியின் தலைவர், அதன் நாடாளுமன்றத் தலைவர் மற்றும் 23 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும், அவர்களில் 12 பேர் AICCயாலும், மீதமுள்ளவர்கள் கட்சித் தலைவராலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த காலங்களில் CWC க்கு கடந்த 1997 ஆம் ஆண்டு சீதாராம் கேஸ்ரி தலைமையில் கல்கத்தா பொதுக்குழுவில் தேர்தல் நடைபெற்றது. சோனியா காந்தி ஏப்ரல் 1998 இல் காங்கிரஸ் தலைவராக ஆன பிறகு, CWC உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கார்கே அறிக்கையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் குறித்தும் வழிநடத்தல் குழு கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: At key congress meeting kharges message to colleagues

Best of Express